பி.எஸ்.என்.எல். செல்போன் பேன்சி நம்பர்கள் ஏலம்… ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

images (14)சென்னையில் பி.எஸ்.என்.எல். செல்போன் வைத்திருப்பவர்கள் தங்களது பழைய நம்பர்களை மாற்றி பேன்சி நம்பர்களை தேர்ந்தெடுக்க தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தால் அதிக தொகைக்கு கேட்பவர்களுக்கு பேன்சி நம்பர் ஒதுக்கப்படும்.

இது குறித்து பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன் இணைப்புகளுக்கு புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள், மற்றும் பழைய எண்களை மாற்றி பேன்சி நம்பர் பெற விரும்புபவர்கள் ஆன்-லைன் மூலம் ஏலம் கேட்கலாம். www.chennai.bsnl.co.in என்ற இணைய தள முகவரியில் உள்ள பேன்சி நம்பர்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்து ஏலம் கோர வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு பேன்சி எண் ஒதுக்கப்படும்.

விருப்பமான எண்களுக்கு எவ்வளவு தொகை செலுத்த முடியும் என்ற விவரத்தை அதில் குறிப்பிட வேண்டும். பேன்சி நம்பர் பெற நாளை முதல் 10-ந்தேதிவரை Amoxil online ஆன்லைனில் ஏலம் பெறலாம்.

Add Comment