மைக்ரோசாப்ட் வேர்ட் இல் யுனிகோட் தமிழை உள்ளீடு செய்யும் மென்பொருள்

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் வேர்ட் பயன்படுத்தும் போது யுனிகோட்   தமிழில் டைப் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மைக்ரோசாப்ட் இன் புதிய Microsoft Indic Language Input Tool  ஐ பயன்படுத்தலாம்.

கீழே உள்ள டவுண்லோட் இணைப்பிற்கு சென்று , Install Desktop Version ஐ க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

மேலும் உங்களது இயங்குதளத்திற்கு (விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டா / ஏழு) ஏற்ப இந்த வசதியை எப்படி உருவாக்குவது என்பது இந்த தளத்திலேயே விரிவாக, விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளதால் நான் அதை இங்கு விளக்கவில்லை)

online pharmacy no prescription border=”0″ alt=”” />

இந்த கருவியை நிறுவி, உங்கள் இயங்குதளத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்த பிறகு, Language Tool bar இல் தமிழ் வந்திருப்பதை கவனிக்கலாம். இனி வேர்டில் தமிழில் தட்டச்சு செய்வதற்கு முன்பாக இதனை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

இனி தட்டச்சு செய்யும் பொழுது, வார்த்தைகளை முடிக்கும் பொழுது, சம்பந்தப்பட்ட பிற வார்த்தைகள் Context menu வில் தோன்றுவதை கவனிக்கலாம். லதா எழுத்துருவில் எளிதாக தட்டச்சு செய்ய முடிகிறது.

Microsoft Indic Language Input Tool தரவிறக்க

Add Comment