மலேசியாவில் தமிழ்நாட்டுக்காரர் கொடூரமாக சித்திரவதை!

1012759_302546726549360_1617274877_n

மலேசியாவில் தமிழ்நாட்டுக்காரர் கொடூரமாக சித்திரவதை!

மலேசிய அரசினை உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட வேண்டும்.

காரைக்குடி வட்டத்தினை சேர்ந்தவர் கருப்பையா. இவர் மலேசியாவில் உள்ள தமிழருக்கு சொந்தமான உணவகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார். இவருக்கு கடந்த ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் தான் இந்தியா திரும்பவேண்டும் என்று சொல்லி சம்பளம் கேட்டார். ஒரு நாள் (5/6/13) வேலைக்குப் போகாமலும் இருந்துவிட்டார். ஆத்திரமுற்ற முதலாளி மறுநாள் (6/6/2013) தமது மற்றொரு அலுவலகத்திற்கு வரசொல்லி “நீதான் எனது பணம் Rm250000 (rs 50lacksh) திருடிவிட்டாய் அந்த பணத்தினை தந்தால் உன்னை அனுப்பிவைக்கிறேன்” என்று சொன்னாராம். அதிர்ச்சியுற்ற கருப்பையா இதனை மறுக்கவே அங்கு வைத்து அடியாட்கள் கொண்டு அடித்திருக்கிறார். மேலும் கருப்பையாவை ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று சங்கிலியால் கால் கைகளை கட்டிப்போட்டு தினசரி 21 நாட்கள் உடலில் கத்தியாலும், சுடுநீராலும், கம்பாலும் அடியாட்கள் கொண்டு தாக்கியிருக்கிறார்.
கருப்பையாவின் தந்தைக்கும், மலேசியாவில் உள்ள கருப்பையாவின் நண்பர்களுக்கும் போன் செய்து ஐம்பது லட்சம் கொடுத்தால் கருப்பையாவை விட்டுவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். எங்கிருந்தும் பணம் கிடைக்காது போகவே மிகுந்த சித்திரவதைக்கு உள்ளான கருப்பையாவை வெளியில் விட்டால் ஆபத்து என்றெண்ணி கொன்றுவிட முடிவு செய்திருக்கிறார் இந்த மலேசியத் தமிழன்.

இந்நிலையில் 27/6/2013 அன்று வரை சங்கிலியால் தனிமையில் பூட்டப்பட்டிருந்த கருப்பையா அன்று மாலை தனது உயிர் போய்விடும் நிலையில் கூக்குரலிட்டும் வீட்டின் கதவை முட்டி Buy Lasix மோதியும் சத்தம் போட்டுள்ளார். சத்தத்தினை கேட்ட பக்கத்து வீட்டினர் வீட்டை உடைத்து கருப்பையாவை தப்பிக்க வைத்துள்ளனர்.

28/6/2013 அன்று காலை இவரது தந்தை அழகு என்பவர் சிவகங்கை மாவட்ட ஆட்சியாளரிடம் தனது மகனை காப்பாற்றும்படி மனு கொடுத்தார். மலேசியாவில் உள்ள “தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றத்தினர்” அவரை பத்திரமாக மீட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைத்ததோடு காவல்நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். ஆனால் இந்த புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக தமிழக முதல்வரும், மத்திய அரசின் அமைச்சர்களும் உடனடியாக தலையிட்டு மலேசிய அரசினை குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அவர் நீதியிலிருந்து தப்பித்துவிடாமல் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

Add Comment