மும்பையில் ரூ.25 லட்சத்தை திருடியவர் ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்து சிக்கினார்

மும்பையில் தான் வேலை பார்த்த வீட்டில் இருந்து பணம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிய நபர் ஃபேஸ்புக் மூலம் சிக்கினார்.

நவி மும்பை பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் Buy cheap Lasix ஒன்றில் ஓய்வு பெற்ற கப்பல்படை அதிகாரி தீபக் ரௌத்(69) வசித்து வருகிறார். அவரது மனைவி அம்ரிதா(65). அவர்கள் வீட்டில் சுவபிரதா சான்யால்(25) என்பவர் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் உணவில் மயக்க மருந்தை கலந்து தீபக் மற்றும் அம்ரிதாவுக்கு கொடுத்துள்ளார்.

உணவை சாப்பிட்ட அவர்கள் மயங்கினர். இதையடுத்து சான்யால் வீட்டில் இருந்த பணம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிக் கொண்டு ஓடிவிட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சான்யாலை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி சான்யால் தீபக், அம்ரிதா மற்றும் அவர்களின் மகன், மகளுக்கு ஃபேஸ்புக்கில் ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார்.

இதை வைத்து போலீசார் சான்யால் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயன்றனர். அவர் வெவ்வேறு இடங்களில் இருந்து இன்டர்நெட்டை பயன்படுத்தியபோதும் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து அவர் 2 முறை இன்டர்நெட்டை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் வைத்து கைது செய்யப்பட்டு மும்பைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொண்டு வரப்பட்டார்.

தீபக் வீட்டில் திருடிய பிறகு சான்யால் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Add Comment