கடையநல்லூர் காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஃபித்ரா அரிசி நலத்திட்ட உதவிகள்

DSC00906
DSC00910
Viagra No Prescription class=”aligncenter size-full wp-image-36164″ alt=”DSC00908″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2013/08/DSC00908.jpg” width=”507″ height=”381″ />
DSC00902
DSC00906

கடையநல்லூர் காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஃபித்ரா அரிசி நலத்திட்ட உதவிகள்

நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து விடும்படி கண்மணி நாயகம் ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி),
நூல்: புகாரி 1509

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் கண்மணி நாயகம் ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: அபூதாவூத் – 1371, இப்னுமாஜா – 1817

என்ற நபிமொழி – க்கு ஏற்ப

கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக ரமலான் ஃபித்ரா அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர் உதுமானியா முஸ்லிம் சங்கத்தில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது. சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் பயன்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் டி.ஏ.செய்யது அஹமது தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் முன்னிலை வகித்தார். நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் லத்தீப் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி தலைவர் நல்லூர் கே.எம்.ரஹ்மத்துல்லாஹ், நகர முதன்மைச் செயலாளர் செய்யது மசூது, மாவட்ட துணைச் செயலாளர் ஹைதர் அலி, அய்யூப் கான், வார்டு உறுப்பினர்கள் S.S .முபாரக், ஆசிரியர் மசூது, அப்துல் காதர் உட்பட ஏராளமான பொதுமக்களும் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் செலமலெப்பை கோதரி நன்றியுரையாற்றினார்.

தகவல்,
க.கா.செ.

Add Comment