தலைவா படத்திற்கு தடை? எங்கே போனார்கள்? கருத்து சுதந்திர வாதிகள்!

1098088_368622196598726_1381539712_n

எல்லாரும் சந்தர்ப்பவாதிகாள்தான் என்பதில் ஐயமில்லை என்றாலும், தலைவா படத்தின் தடையில் அரசின் நேரடி தலையீடு இல்லாததால் அரசை எதிர்த்து குரல் கொடுக்கமுடியாதே?

கருத்து சுதந்திரம் பேசும் நியாயவான்களே !

தலைவா படத்திற்கு தடை ? எங்கே போனார்கள் ?

பொது மக்களே! இவர்களை கண்டு பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப் படும் !

தமிழ் நாட்டுக்காக பல்வேறு தியாகங்கள் ??? செய்த தங்க தமிழன் ? கமல் நடித்து வெளி வர இருந்த விஸ்வருபம் படம் அந்த படத்தில் ஒரு மதம் சார்ந்த கொச்சை படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் என்றும் அதில் முஸ்லிம்களும் ,இஸ்லாமும் திவீரவாததை ஆதரிப்பது போன்றும் அநியாயக்கார நாடான அமெரிக்காவை மனித நேயமிக்க நாடாகவும் ,முஸ்லிம்களை கொடூர மனம் படைத்தவர்கள் போலும் அந்த படம் எடுக்கப் பட்டுள்ளது

இதற்க்கு இஸ்லாமியர்களும் ,இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று கடும் குரல் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது

மனித நேயமிக்க நல்லவர்களான சமூக நல ஆர்வலர்கள் சுகுமாரன் ,பேரா .மார்க்ஸ், நடிகர் மணிவண்ணன், சீமான் போன்றவர்களும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்தார்கள்

அதன் விளைவாக தமிழக அரசு முஸ்லிம்களின் மனம் காயப் பட்டுள்ளதை அறிந்து இந்த படத்திற்கு தடை போட்டது

உடனே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பாரதிராஜா ,உள்ளிட்ட Lasix No Prescription பல சினிமா பிரமுகர்களும் தன நிலை தடுமாறி ஒரு சில சமூக நல ஆர்வலர்களும் , அரசியல் வாதிகளும் கூட கமலுக்காக வக்காலத்து வாங்கினார்கள்

கேட்டால் இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று பத்திரிக்கைகளுக்கும் ,மீடியாக்களுக்கும் தங்களால் என்ன என்ன கருத்துக்களை சொல்ல முடியுமோ அனைத்தையும் கொட்டி தீர்த்தனர்

இவர்கள் முஸ்லிம்களை பற்றியோ அல்லது தாங்கள் சொல்லும் கருத்துக்கள் சரிதானா என்று கூட சிந்திக்க வில்லை

அந்த அளவிற்கு நடந்து கொண்டனர் நடுநிலையாக இருந்த சில மனிதர்கள் கூட கமலுக்கு ஆதரவாக மாறியது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தந்தது

பின்பு கமலே அந்த படத்தில் உள்ள முஸ்லிம்களின் மனம் பாதிக்கும் காட்சிகளை எடுத்து வெளியிட ஒத்துக் கொண்டது பின்பு அந்த படம் வந்த இடம் கூட தெரியாமல் போனது தனிக் கதை

சரி விசயத்திற்கு வருகிறேன் ;
ஏற்க்கனவே முஸ்லிம்களை சீண்டி துப்பாக்கி என்ற படம் எடுத்து சிரழிந்து போன நடிகர் விஜய் தற்சமயம் தலைவா என்ற படத்தை எடுத்து வெளியிட இருந்தார் .

ஆனால் என்ன காரணமோ இன்று வரை தமிழகத்தில் அந்த படம் திரையிட முடிய வில்லை
இதற்காக தமிழக முதல்வரை சந்திக்க முயற்சி செய்தும் ஏமாற்ற்றதுடன் திரும்பிய செய்தியும் உண்டு

ஒரு மதத்தை (மார்க்கத்தை)பற்றி படம் எடுத்த கமலுக்காக கருத்து சுதந்திரம் என்று கூறி விஸ்வ ரூபம் படம் வெளியிட வலியுறுத்திய நியாயவான்கள் இப்போது எங்கே போனார்கள் ?

.தலைவா! திரைப்படத்தை தடை செய்வது கருத்து சுதந்திரத்திற்கு தடை விதிப்பது போன்றதாகும்

நாங்கள் அதனை அனுமதியோம் என்று கூறி வானத்திற்கும் பூமிக்கும் யாரும் குதிக்க வில்லையே ஏன் ?

(இவர்களை எங்கேனும் கண்டால் கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு நாம் தக்க சன்மானம் தருவோம்)

இவர்கள் யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் இந்த படம் முஸ்லிம்களை பற்றியோ இஸ்லாத்தை பற்றியோ மோசமாக எடுக்க வில்லை மாறாக அரசியலை பற்றியும் மும்பை தாதாவை பற்றியுமான கதையாகும்

ஆ கா .. என்னே கருத்து சுதந்திரம்! இதுவல்லவா இவர்களின் கருத்து சுதந்திரம் !வாழ்க தமிழகம் ! வளரட்டும் கருத்து சுதந்திரம் !

தலைவா படத்தின் கதை தான் என்ன ?
அப்படி தடை போடுவதற்கு அதில் என்னதான் உள்ளது என காண முற்ப்பட்டோம்

படத்தின் கதை இது தான் ;
மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியின் தலைவரான நாசர் அந்த தலைவர் பதவியை விட்டு விட்டு செல்கிறார்

.அதனை சத்திய ராஜ் சந்தர்ப்ப சூழலில் ஏற்றுக் கொள்கிறார் .தனது மகனுக்கு தான் ஒரு ரவடியாக இருப்பது தெரிய
கூடாது என்று வெளி நாட்டில் வளர்க்கிறார் .

சந்தர்ப்ப சூழலில் மும்பை வருகிறார் ,தந்தை சத்திய ராஜ் கொல்லப்படுகிறார் .இவர் தந்தையின் பொறுப்பை எடுக்கிறார் நடிகர் விஜய்

இது தான் கதையின் சுருக்கம் இதில் எந்த மதமும் புண்படும் படி எடுக்க வில்லை ,எந்த மனமும் புண்படும் படி இல்லை இந்த படத்தை வெளியிட ஏன் யாரும் வலியுறுத்த வில்லை

ஒரு சமுதாயத்தையே குற்ற பரம்பரையாக எடுத்துக் காட்டும் விஸ்வ ரூபம் படத்தை வெளியிட சொன்ன புண்ணியவான்கள் இப்போது எங்கே போனார்கள் .?

யாரும் வர மாட்டார்கள் காரணம் ;?
தமிழக முதல்வரை பகைத்துக் கொள்ள இவர்கள் தாயாராக இல்லை இந்த படம் வெளி வர தடை சொல்லும் இயக்கம் அல்லது சமுகம் யார் என்று யாருக்காவது தெரியுமா
தெரிய முடியாது காரணம் தடை செய்தது அம்மாதானே ?

அப்படி இருக்கையில் யாருக்கு வரும் எதிர்க்கும் துணிவு விஸ்வருபம் படத்தை தடை செய்ய சொன்னது முஸ்லிம்கள் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கலாம்

இந்த படத்தை தடை செய்ய சொன்னது மறைமுகமாக அம்மா அல்லவா ? யாருக்கு வரும் எதிர்க்கும் துணிவு

தலைவா படம் வெளியிட வேண்டும் என்றால் நாம் சொல்லும் ஆலோசனை ;
ஒய் ஜி மகேந்திரன் விஜயை பார்த்து மக்கள் உன்னை விரும்பி தான் அழைக்கிறார்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள் என்று ஒரு வசனம் பேசுகிறார்

அடுத்து ஒரு வசனம் ;
நீ அண்ணாவையே மிஞ்சி விட்டாய் என்று வரும் வசனத்தையும் கட்டிங் செய்ய வேண்டும் இந்த வசனத்தை கட்டிங் செய்தால் அம்மாவிற்கு ஒரு வேளை மனம் இறங்கும்

மும்பை வேடம் சத்திய ராஜ் அதில் ஒன்றும் தவறில்லை
மும்பை மக்களுக்கும் ,பிழைப்பு தேடி வந்த மக்களுக்கும் கலவரம் போன்று ஒரு சீன் தேவையில்லாமல் எடுத்துருந்தாலும் இது போன்ற பல காட்சிகள் பாட்சா போன்ற பல படத்தில் வந்து விட்டது .

ஓகே ! நான் சொன்ன காட்சிகளை நீக்கி விட்டு அம்மாவை பாருங்கள் படம் தானாக திரைக்கு வரப் போகிறது

கருத்து சுதந்திரம் என்று சொல்லும் புண்ணியவான்களே !ஒரு தலை பட்சமாக நடந்து கொள்ளாதிர்கள் !கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நல்ல கருத்துக்களை கொண்ட சமூக நல ஆர்வலர்களே தடுமாறி விடாதிர்கள் !

ஆபாச சினிமாவிடம் இருந்தும் ,மதவாத சக்திகளிடம் இருந்தும் ,ஊழல் பெருசாலிகளிடம் இருந்தும் நம் தேசத்தை காக்க ஒன்று படுவோம்

நல்ல மாந்தர்களை நாம் உருவாக்குவோம் !
நம் பாரத தேசத்தில் ஒற்றுமையாக வாழ்த்திடுவோம் !

அனைவருக்கும் 67 ஆவது சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

Add Comment