கடையநல்லூரில் காதல் மனைவியை ஏற்க மறுத்த கணவர் கைது…

2

கடையநல்லூரில் காதல் மனைவியை ஏற்க மறுத்த கணவர் கைது…

தென்காசியை சேர்ந்த சாகுல் அமீது, அமிதாள் தம்பதியின் மகள் செரீனா (வயது 23). இவர் தென்காசி அருகே உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது தன்னுடன் படித்த இடைகால் ஏ.ஆர்.எஸ் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகளை பார்க்க Buy cheap Lasix சென்றபோது அவரது சகோதரர் பிரவீன் குமார் (32) என்பவருடன் செரினாவுக்கு காதல் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் கடந்த 2012 ஜனவரி மாதம் தாராபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண விவகாரம் பிரவீன்குமார் பெற்றோருக்கும் தெரியவந்தது.

இதற்கிடையில், செரீனா படிப்பு முடித்து திருச்சியில் தங்கியிருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிரவீன்குமார் அடிக்கடி திருச்சி சென்று காதல் மனைவியை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர், காதல் மனைவியை சந்திக்க திருச்சிக்கு செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த செரீனா அவரை போனில் தொடர்பு கொண்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து, காதல் கணவர் மீது நெல்லை மாவட்ட எஸ்.பியிடம் செரீனா புகார் தெரிவித்தார். அவரது அறிவுரையின் பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பிரவீன்குமார் குடும்பத்தினர் செரீனாவை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.

இந்நிலையில், செரீனா காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி கடந்த 13–ந்தேதி முதல் இடைகாலில் உள்ள பிரவீன்குமார் வீட்டு முன் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செரீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போராட்டத்தை கைவிடவில்லை. நேற்று 4–வது நாளாக அவரது போராட்டம் நடைபெற்றது.

மேலும் செரினாவுக்கு ஆதராக கம்யூனிஸ்டு கட்சியினர், மாதர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் செரீனா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் அதிகாரிகளை வலியுறுத்தினர்.

இதையடுத்து நேற்று பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து செரீனாவும் தனது போராட்டத்தை கைவிட்டார். அவரை பிரவீன்குமாருடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் மாதர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Add Comment