இந்திய ஊழலின் தலைநகரம் தமிழகம்!

2009ஆம் ஆண்டு இந்திய ஊழலின் தலைமை இடமாகத் தமிழகம் திகழ்ந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு பீரோ வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடைபெற்ற ஊழல் தொடர்பான தகவல்களை தேசிய குற்றப் பதிவு பீரோ (NCRB) வெளியிட்டுள்ளது. இந்த தகவலின் படி நாடு முழுவதும் 5 ஆயிரம் அரசு அதிகாரகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த அதிகாரிகளிடம் இருந்து 61 கோடி ரூபாய் பணம் மீளப் பெறப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் 5 ஆயிரம் பேரில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் 790 பேர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஊழலில் தமிழக அதிகாரிகள் முதலிடத்தைப் பெற்று நமக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளனர்.

தமிழகத்தைத் தொடர்ந்து ஒரிசாவைச் சேர்ந்த அதிகாரிகள் 561 அதிகாரிகள், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 542 பேர், Cialis online கேரளாவைச் சேர்ந்த 477 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 430 அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் ஊழல் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில் 375 அதிகாரிகள் “ஏ” கிரேடு நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் ஆவர். 789 பேர் “பி” கிரேடு அதிகாரிகள். 3,039 பேர் கடைநிலையில் அரசு ஊழியர்கள். இவர்களே பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் என்று அந்தப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இத்துனை பேர் மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதே? அவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா எனில், ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.

ஊழல் பணத்திலிருந்து சொத்து சேர்த்தவர்களிடமிருந்து 60.91 கோடி ரூபாய் சொத்துகளை அரசு பறிமுதல் செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் தம்பதியான அர்விந்த் மற்றும் டினு ஜோஷி ஆகியோரிடமிருந்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்திருப்பதுதான் இதுவரையிலான அதிகபட்சப் பறிமுதல். 2008ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துகள் 25.4 கோடிகள். இது 60.891 கோடிகளாக உயர்ந்துள்ளது.

Add Comment