க‌ரூர் மாவ‌ட்ட‌ம் ப‌ள்ள‌ப‌ட்டியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

க‌ரூர் மாவ‌ட்ட‌ம் ப‌ள்ள‌ப‌ட்டியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு
ம‌த்திய‌ அமைச்ச‌ர் இ.அஹமது, பேராசிரியர் கே.எம். காத‌ர் மொகிதீன், த‌மிழ‌க‌ க‌ல்வி அமைச்ச‌ர் தங்கம் தென்னரசு ம‌ற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்க‌ள் பங்கேற்கின்றனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்த நாளை முன் னிட்டு கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் ஜூன் 9 புதன்கிழமை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது, தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

ஜூன் 9-ம் தேதி புதன் கிழமை கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் நடை பெறும் இம் மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை ஏற்கிறார். மாநிலத் துணைத் தலைவர்கள் எழுத்தரசு திருச்சி ஏ.எம். ஹனீப், வாணியம் பாடி அரூர் அப்துல் ஹாலிக், கோவை எல்.எம். அப்துல் ஜலீல், இனாம் குளத்தூர் மவ்லவி சாகுல் ஹமீது, சேலம் எம்.பி. காதர் உசைன், திருப்பூர் பி.எஸ். ஹம்சா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மவ்லானா காரி முஹம் மது சர்புதீன் பாகவி கிரா அத் ஓதுகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசுகிறார். மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.

கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
மாநாட்டில் நடை பெறும் கல்வி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத் தரங்கில் மாநில செயலா ளர்களான இஜட். ஜபருல்லாஹ், நெல்லை அப்துல் மஜீத், எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், காயல் மஹப+ப், கமுதி பஷீர் மற்றும் திருப் பூர் எம்.ஏ. சத்தார் ஆகி யோர் உரையாறுகின்ற னர்.

மாநாட்டுத் தீர்மானங் களை முன்மொழிந்து வழி மொழிந்து எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., எச். அப்துல் பாசித் எம்.எல்.ஏ. உரையாற்றுகின்றனர்.

தி.மு.க. சொத்துப் பாது காப்பு உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி, மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்ரமணியன் மற்றும் எம்.எஸ். மணியன், டி.எம். பஷீர் அஹமது, வாலி அக்பர் அலி, ஓ.எம். பீர் முஹம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்ற னர்.

காயிதெ மில்லத் விருது

நீண்ட காலம் சமுதாய சேவையாற்றிய தாய்ச்சபை ஊழியர் திலகங்களான கூடலூர் கே.பி. முஹம்மது ஹாஜி, களமருதூர் ஜே. அப்துல் ஹக்கீம் ஹாஜி யார் ஆகியோருக்கு காயிதெ மில்லத் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இதற்கான வாழ்த்துப் பத்திரங்களை தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, கே.எம். நிஜாமுதீன், மில்லத் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் வாசித்தளிக்கின்றனர்.

கடந்த ஆண்டு முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்ட ளையின் சார்பில் வெளியி டப்பட்ட சிறந்த நூலாசிரி யருக்கான விருதும், ரூ.25 ஆயிரம் பொற்கிழியும் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரனுக்கு வழங்கப்படு கிறது.

விருது பெற்றோரை பாராட்டி மாநிலப் பொரு ளாளர் வி.எம். செய்யது அஹமது, எஸ்.டி. நிஸார் அஹமது, நெல்லை எஸ். எஸ். துராப்ஷா, சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் உரையாற்றுகின் றனர்.

மத்திய – மாநில அமைச்சர்கள்

நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்க ளைப் பெற்ற முஸ்லிம் மாணவர்களுக்கும், முஸ்லிம் மாணவிகளுக்கும் இம் மாநாட்டில் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளன.

இப் பரிசுகளை வழங்கி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்று கிறார்.

மத்திய அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.

கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் டி.எம்.ஏ. முபாரக் பாஷா நன்றி கூற மவ்லானா அப்துல் ரஹ்மான் சிராஜி துஆவுடன் மாநாடு நிறைவு பெறுகிறது.
சிறப்பான ஏற்பாடுகள்
இம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெறு கின்றன. அரவாக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் தலைமையிலான வரவேற் புக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வரு கின்றனர். தமிழக முழுவதி லுமிருந்து கல்வி நிறுவனங் கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் ஊழி யர்கள், இளைஞரணி செயல் வீரர்கள், மாணவர் அணி, தொழிலாளர், உள் ளிட்டோர் அணிகளின் ஊழியர்களும் பெரும் திரளாக பங்கேற்கின்றனர்.

கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பரிசு பெறும் மாநில அளவிலான முஸ்லிம் மாணவ – மாணவியர்

மேல் நிலை-மாணவிகள்

1. ஷமீமா -1182 எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேனிலைப்பள்ளி சமயபுரம் திருச்சி – ரூ.10,000
2. (அ) ஏ.சி. ரஜப் பாத்திமா – 1179 பாரத் மாண்டிச்சேரி மெட்ரிக் மேனிலைப்பள்ளி இலஞ்சி, நெல்லை மாவட்டம் – ரூ. 7,000,
2. (ஆ) பெமினா ஷரின் ஷாஜஹான் – 1179 மகாத்மா மெட்ரிக் மேனிலைப்பள்ளி அழகர் கோவில் மதுரை – ரூ.7,000

மேல்நிலை மாணவர்கள்

1. மசூத் அஹமது உஸ்மான் -1184 டான்பாஸ்கோ மெட்ரிக் மேனிலைப்பள்ளி எழும்ப+ர்-சென்னை – ரூ.10,000
2. ஏ.ஹெச். குல்ஸார் -1181 டி.ஏ.வி. மேனிலைப்பள்ளி சென்னை ரூ.8,000
3. எஸ். பரக்கத் -1180 ஸ்ரீவிஜய் வி.பி. மெட்ரிக் மேனிலைப்பள்ளி தர்மபுரி – ரூ.6,000

எஸ்.எஸ்.எல்.சி., மாணவிகள்

1. எஸ். ஜாஸ்மின் -495 முனிஸிபல் பெண்கள் மேனிலைப் பள்ளி திருநெல்வேலி – ரூ.5,000
2. எம். நஸ்ரின் பாத்திமா – 493 சென்ஜோசப் பெண்கள் மேனிலைப்பள்ளி, ஆரணி ரூ.4,000
3. அ) எஸ். முகைதீன் பாத்திமா யாஸின் – 491 முனிஸிபல் பெண்கள் மேனிலைப்பள்ளி திருநெல்வேலி ரூ.3,000
3. ஆ) ஆர். ரஸீதா ரினோஸா – 491 சென்அந்தோனி பெண்கள் மேனிலைப்பள்ளி ஆர்.ஏ.புரம் சென்னை ரூ.3,000

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள்

1. எஸ். ஷாஜஹான் -489 செயின்ட் மேரிஸ் மேனிலைப்பள்ளி, மதுரை ரூ.5,000
2. அ) எம்.எல். அஹமது சாகிப் – 488 சென் ஜோன்ஸ் மேனிலைப்பள்ளி பாளையங்கோட்டை ரூ.3,000
2. ஆ) பி. ஹுசைன் அஹமது – 488 இஸ்லாமியா ஆண்கள் மேனிலைப்பள்ளி வாணியம்பாடி ரூ.3,000
2. இ) முஹம்மது அப்துல் காதர் – 488 அரசினர் மேனிலைப்பள்ளி கொல்லபுரம் (நாகை வடக்கு) ரூ.3,000

மேற்கண்ட buy Ampicillin online மாணவர்களும், அவர்களுடன் உடன் வருவோரும் தங்குவதற்கு ஆசியா மஹால், திண்டுக்கல் ரோடு, பள்ளபட்டி என்ற முகவரியில் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதற்கான போக்குவரத்து செலவும் அளிக்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
9940426876, 9600311353, 9442661500

Add Comment