தொடரை வென்றது ஆஸ்திரேலியா *இங்கிலாந்து பரிதாபம்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் ஐந்தாவது போட்டி நேற்று, பிரிஸ்பேனில் நடந்தது. “டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கிளார்க், பேட்டிங் தேர்வு செய்தார்.
சுமாரான துவக்கம்:
ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (16), ஹாடின் (37) இணைந்து சுமாரான துவக்கம் தந்தனர். மார்ஷ், ஒயிட் இருவரும் தலா 16 ரன்கள் எடுத்து திரும்பினர். சற்று தாக்குப்பிடித்த ஹசி 34 ரன்கள் எடுத்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கிளார்க், அரைசதம் அடித்து (54) அவுட்டானார். பின்வரிசையில் ஜான்சன் (16), ஹாஸ்டிங்ஸ் (13) ஓரளவு ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. ஸ்மித் (24) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் Levitra online வோயக்ஸ், 6 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து தோல்வி:
எட்டிவிடும் இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. கேப்டன் ஸ்டிராஸ் (3), பிரையர் (14) நிலைக்கவில்லை. கடந்த போட்டியில் சதம் அடித்த டிராட், இம்முறை “டக்’ அவுட்டானார். பீட்டர்சன் (40), பெல் (36) ஆறுதல் தந்தனர். பின் வந்த மார்கன் (2), கோலிங்வுட் (18) ஆகியோர் கைவிட்டனர்.
கடைசி நேரத்தில் ஸ்டீவன் பின் (35) போராட்டம் வீணானது. இங்கிலாந்து அணி 45.3 ஓவரில் 198 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியாவின் வாட்சன் 3, பிரட் லீ, போலிஞ்சர், ஹாஸ்டிங்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருது வோயக்சிற்கு வழங்கப்பட்டது.

Add Comment