ஈடனுக்கு மறுப்பு: பெங்களூருவுக்கு வாய்ப்பு *பி.சி.சி.ஐ., பரிந்துரையால் சர்ச்சை

இந்தியா-இங்கிலாந்து மோதும் உலக கோப்பை போட்டியை, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த இயலாது என ஐ.சி.சி., உறுதியாக தெரிவித்து விட்டது. இப்போட்டியை பெங்களூருவுக்கு மாற்றலாம் என, பி.சி.சி.ஐ., பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை (பிப்., 19 – ஏப்., 2) நடக்க உள்ளது. இதில் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் மொத்தம் நான்கு போட்டிகள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் கட்டுமானப் பணிகள், நிறைவு பெறவில்லை. இதையடுத்து வரும் பிப்., 27ல் நடக்க இருந்த இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் போட்டியை, வேறு மைதானத்தில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) முடிவெடுத்தது.
இப்பிரச்னையில் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் தலையிட்டு, போட்டியை மீண்டும் கொண்டு வரும் பொறுப்பை, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கான்டி கங்குலி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் ஒப்படைத்தார். இவர்கள் ஐ.சி.சி., தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், இதில் தலையிட்டார். இவ்வாறு மாநில முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள் என, பல்வேறு தரப்பில் இருந்தும், ஐ.சி.சி.,க்கு கோரிக்கை விடப்பட்டது.
இதனால், ஐ.சி.சி., முடிவில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியை மாற்றுவது என்ற திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என, நேற்று ஐ.சி.சி., உறுதியாக தெரிவித்தது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில்,”” கோல்கட்டாவில் போட்டியை நடத்தும் வாய்ப்பு இல்லை என்ற தகவலை ஐ.சி.சி., அனுப்பியது. இதனால், கோல்கட்டாவுக்குப் பதிலாக, பெங்களூருவில் நடத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டால்மியா அதிர்ச்சி:
இந்த முடிவை கேட்டதும் கோல்கட்டா கிரிக்கெட் சங்க (சி.ஏ.பி.,) தலைவர் டால்மியா அதிர்ச்சி அடைந்தார். இவர் கூறுகையில்,”” ஐ.சி.சி., தலைவர் சரத்பவார், பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன், தலைமை அதிகாரி ரத்னாகர் ஷெட்டி ஆகியோரிடம் 5 அல்லது 6 முறை டெலிபோனில் பேசினேன். இறுதியில், பலன் எதுவும் கிடைக்கவில்லை,” என்றார்.
எல்லாம் முடிந்தது:
இதுபற்றி சி.ஏ.பி., செயலர் பிஸ்வரப் தே கூறுகையில்,”” எப்படியும் எங்களுக்கு மீண்டும் Bactrim No Prescription ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தோம். முதல்வர் தலையிட்ட பிறகும், அவர்கள் சம்மதிக்கவில்லை. தற்போது எல்லாம் முடிந்து விட்டது. இதுகுறித்து ஒன்றும் பேசமுடியவில்லை. ஆனால், இந்திய அணி விளையாடும் உலக கோப்பை போட்டி, ஒரு மைதானத்துக்கு ஒன்று தான் ஒதுக்கப்படும் என்ற விதி உள்ள நிலையில், பெங்களூருவுக்கு மட்டும் எப்படி இரண்டு போட்டிகளை ஒதுக்கலாம். இது குறித்து பி.சி.சி.ஐ., கூட்டத்தில் கேள்வி எழுப்புவோம்,” என்றார்.

Add Comment