கடையநல்லூரில் ஒரு பெண் உட்பட 7 பேருக்கு கண்பார்வை பறிபோன பரிதாபம்-கலெக்டரிடம் TNTJ சார்பில் மனு

P1010142 P1010143 IMG_0672

தவறான கண் சிகிச்சை செய்து கண்பார்வை பறி போக காரணமாக இருந்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் இழப்பீடு தொகை வழங்குவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் கலெக்டர் சி.சமயமூர்த்தி அவர்களுக்கு கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பில் மனு கொடுக்கபட்டது அதன் விபரம் வருமாறு….

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், மாவட்ட கண்பார்வையற்றோர் தடுப்பு சங்க உதவியுடன் தென்காசி அரசு கண் மருத்துவ பிரிவினர்களும் சேர்ந்து கடந்த 08.04.2013 அன்று சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் 15 பேரின் கண்களில் பிரச்சனை இருப்பதாக கூறினர் அதன் பேரில் அவர்கள் அணைவருக்கும் தென்காசி அரசு மருத்துவமணையில் கண் அறுவை சிகிச்சை 10.04.2013 அன்று நடைபெற்றது.

அதன் பின்னர் 3 நாள்கள் கழித்து கண்களில் கட்டப்பட்டு இருந்த கட்டை அவிழ்த்து பார்த்த போது நெல்லை மாவட்டம் தென்காசி வட்டம் சேர்ந்தமரத்தை சேர்ந்த செல்லம்மாள் (வயது 60) மற்றொரு செல்லம்மாள் (60) மாரியம்மாள் (59) நடுவக்குறிச்சியைச் சேர்ந்த செல்லம்மாள், குலையநேரியைச் சேர்ந்த சுப்பம்மாள், லட்சுமி, கடையநல்லூர்ரை சேர்ந்த மரியம் ஆயிஷா ஆகிய 7 பேர்க்கு கண் பார்வை தெரியவில்லை.

உடனே அவர்களை பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்கள் 7 பேரையும் பரிசோதனை செய்த கண் டாக்டர்கள் இவர்களுக்கு கண் பார்வை பறிபோனதை உணர்ந்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய அரசு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். அதன் பேரில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கும் ஒரு மாத காலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனும் இல்லாமல் நிரந்தரமாக கண் பார்வை பறி போய்விட்டது.

அப்பொழுது பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தாங்கள், தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்தீர்கள். ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கும் நிரந்தரமாக கண் பார்வை பறி போய்விட்டது.

எனவே பாதிக்கப்பட்ட இவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்களை மீண்டும் நேரில் சந்தித்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடும், மாதம்தோறும் உதவி தொகையும், வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். ஆனால் இதுவரை எந்த உதவி தொகையும், நஷ்ட ஈடும் வழங்கவில்லை, தினசரி கூலி வேலை செய்து பிழைக்கும் இவர்கள் கடந்த நான்கு மாத காலமாக கண் பார்வை பறி போன காரணத்தால் பிழைப்பு வழி இன்றி மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றார்கள். உடனடியாக பாதிக்கப்பட்ட இவர்களுக்கு

  • முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும்
  • மாதம்தோறும் மாற்று திறனாளிகளுக்கான Amoxil online உதவி தொகை வழங்கவேண்டும்,
  • தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் படி வேலை வழங்க வேண்டும்.

என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டது.

Add Comment