கடையநல்லூரில் ஹஜ் பயணிகளுக்கான “அன்புள்ள ஹாஜிகளே…! சிறப்பு நிகழ்ச்சி

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், கடையநல்லூர் ஊழியர் வட்டத்தின் சார்பில் புனித ஹஜ் பயணிகளுக்கான “அன்புள்ள ஹாஜிகளே……….! என்னும் சிறப்பு நிகழ்ச்சி இன்று (07/09/13) ஹிதாயத்துல் இஸ்லாம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது!

கடையநல்லூர் ஊழியர் வட்ட நாஜிம் சகோ. பீர் முஹமது அவர்கள் தலைமைதாங்கினார்.மௌலவி அபுல் பரகாத் பைஜி அவர்கள் இறைமறை வாசனைகளை ஓதினார்.சகோ முஹம்மது ரில்வான் அவர்கள் வரவேற்புரை.சகோ சேயன் ஹமீது அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

மௌலவி ஹாபிழ் எம். செய்யது இப்ராஹீம் அன்வாரி ஹழரத் அவர்கள் “ஹஜ்ஜின் அமல்களும் அதன் சிறப்புகளும்” எண்ணும் தலைப்பிலும்,

மௌலவி ஹாபிழ் எஸ். லியாகத் அலி மன்பயி ஹழரத் அவர்கள் “ஹாஜிகளாக வாழ்வது எப்படி” என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினர்.

இரு உரைகளும் முற்றிலும் புதிய கோணத்தில் புனித ஹஜ் பயணத்தை அறிமுகம் செய்தன.

நிகழ்ச்சியில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புனிதப்பயணிகள் கலந்து கொண்டனர்!

புனிதப் பயணிகளுக்கு ஐ எப் டி யின் “ஹஜ் உம்ரா வழிமுறைகள் பிரார்த்தனைகள்” என்னும் நூல் வழங்கப் பட்டது!

buy Viagra online width=”550″ height=”568″ />

Add Comment