மொபைல் போனால் மூளைக் கட்டி ஏற்படும் ஆபத்து!

மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஏற்கனவே பல ஆராய்ச்சிகள் மற்றும் செய்திகள் Buy cheap Doxycycline வெளியாகி உள்ள நிலையில், தற்போது மூளைக்கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

மொபைல் போன் அல்லது கார்ட்லெஸ் போனை அதிகமாக பயன்படுத்துவதினால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக நீண்டகாலமாகவே பலவிதமான சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில்,தற்போது இந்தியாவின் குர்காவ் நகரில் உள்ள ஏபிஜே பொறியியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானி ஆர்.பி. துபே மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள், மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதினால், அதிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்க அலைகளால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகள் குறித்து மிக ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில்,மொபைல் போனை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது வெளிப்படும் கதிரியக்க அலைகளின் அளவு, உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுத்துவதாக உள்ளது தெரியவந்துள்ளதாக துபே தெரிவித்துள்ளார்.

Add Comment