ஷார்ஜாவில் தவித்த தமிழ் குடும்பத்திற்கு தமுமுக ஆறுதல் மற்றும் உதவி!

tamilp

தான் பணியாற்றும் நிறுவனத்தின் அதிபர் செய்த சூழ்ச்சியால் சிறைசென்றுள்ள சுதீஷ் என்பவருக்காக, அவரது மனைவி ஒரு கேரள சமூகசேவை அமைப்பின் மூலமாக நீதிமன்றம் சென்று வாதாடி அவரதுகணவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகி இன்னும் ஒரு சிலநாட்களில் சுதீஷ் சிறையிலிருந்து வெளிவர இருக்கிறார்.

கடந்த 4 மாத காலமாக சுதீஷ் சிறையில் இருப்பதால் பொருளாதாரரீதியாக அவரது குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வந்தது. செப்டம்பர் 6-ம் தேதி அவரது குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து அமீரக தமுமுக நிர்வாகிக்கள் துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்கள் தலைமையில் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். மேலும்அவர்களுக்கு உடனடி தேவையாக உள்ள வீட்டிற்கான 3 மாத வாடகை தொகையான 3,350 திர்ஹம்ஸை (இந்திய ரூபாய் 61,500) தருகிறோம் என்றும் உறுதி no prescription online pharmacy அளிக்கப்பட்டுள்ளது.

சிறையிலிருந்து 11-09-2013 இன்று விடுதலையான சுதீஷ் என்கிற சுந்தர்ராஜன்அலைபேசியில் தொடர்புகொண்டு தமுமுக-விற்கு நன்றியை தெரிவித்தார்.

Add Comment