தில்ஷன் சதம்: கோப்பை வென்றது இலங்கை

முத்தரப்பு தொடரில் கோப்பை வென்று அசத்தியது இலங்கை அணி. நேற்று நடந்த பைனலில் கேப்டன் தில்ஷன் சதம் விளாச, ஜிம்பாப்வேயை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் சுற்றில் கலக்கிய ஜிம்பாப்வே முக்கியமான பைனலில் ஏமாற்றம் அளித்தது.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்தது. இதில் இந்திய அணி விரைவாக வெளியேறியது. Buy Cialis Online No Prescription நேற்று நடந்த பைனலில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.

தைபு அரை சதம்: முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மசகட்சா (4) பிரண்டன் டெய்லர் (19) இந்த முறை கைகொடுக்க தவறினர். தைபு (71), லேம்ப் (37) ஆறுதல் அளித்தனர்.
மிடில் ஆர்டரில் சிகும்பரா (10), கவன்ட்ரி (18) சொதப்பினர். பின் வரிசையில் கிரீமர் (5), பிரைஸ் (0), மோபு (6) ஆகியோரும் ஏமாற்ற, 49 ஓவர் முடிவில் “ஆல்-அவுட்டான’ ஜிம்பாப்வே அணி, 199 ரன்கள் மட்டும் எடுத்தது.

தில்ஷன் சதம்: எளிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு, தில்ஷன், தரங்கா ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. ஜிம்பாப்வே பந்து வீச்சை விளாசித் தள்ளிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்தது. இந்நிøயில் தரங்கா (72) ரன்-அவுட்டானார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 7 வது சதம் கடந்தார். கிரீமர் பந்து வீச்சில் தில்ஷன், ஒரு சூப்பர் பவுண்டரி அடிக்க, இலங்கை அணி 34.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 203 ரன்கள் சேர்த்து சுலப வெற்றி பெற்றது. தில்ஷன் (108), சண்டிமால் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

Add Comment