போன் செய்தால் போதும்… வீடு தேடி ‘மொபைல்’ வரும்!

போன் செய்தால் வீட்டுக்கோ வந்து மொபைல் போன் கருவிகளை வழங்கும் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்ஸார் குழுமத்தின் மொபைல் ஸ்டோர்.

இந்தியாவில் சென்னை உள்பட 163 நகரங்களில் இந்த சேவை கிடைக்கிறது.

நாடு முழுவதும் 1300 மொபைல் ஸ்டோர்களை வைத்துள்ளது எஸ்ஸார் நிறுவனம். இதன் வாடிக்கையாளர் மையத்தின் 1800-209-6363 என்ற எண்ணுக்கு போன் செய்து, பின் இணைப்பைத் துண்டித்தால் போதும். இந்த மையத்திலிருந்தே மீண்டும் உங்களைத் தொடர்பு கொண்டு, எந்த மாதிரி போன் வேண்டும் என்று சொல்வார்கள். அவ்வப்போது நடைமுறையிலிருக்கும் சிறப்புத் தள்ளுபடிகள் போன்ற விவரங்களும் தரப்படும்.

வேண்டிய மாடலைச் சொன்னதும் அடுத்த சில நிமிடங்களில் அல்லது மணி நேரங்களில் உங்கள் வீட்டுக்கே மொபைல் போன் வரும். எந்த மாடல் வேண்டும் என்பதை இந்த Buy Doxycycline நிறுவனத்தின் வெப்சைட்டில் போயும் தேர்வு செய்யலாம்.

மேலும் கிரெடிட் கார்ட் மூலம் வாங்க விரும்புவோர், எடுத்த எடுப்பிலேயே தங்கள் கார்டின் எண் மற்றும் விவரங்களைச் சொல்ல வேண்டியதில்லை. எந்த மொபைலை வாங்குகிறோம் என்று முடிவு செய்த பிறகு இந்த விவரத்தைச் சொனால் போதும். அதுகூட தானியங்கி குரல் பதிவு மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மோசடிகள் குறைய வாய்ப்பு உள்ளது, என்கிறார் மொபைல் ஸ்டோரின் ஸ்ரீகாந்த் கோகலே.

Add Comment