கடையநல்லூரில் காட்டுப்பன்றி கடித்து ஒருவர் மருத்துவமையில் அனுமதி!

1 (5)

கடையநல்லூர் மலைப்பகுதி அருகே உள்ள வயல்பகுதிகளில் காட்டு பன்றி அடிக்கடி இரை தேடிவருவது வழக்கம்.

இன்று காலை அதே பகுதியை சேர்ந்த பொண்ணுபாண்டி (வயது 65) வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென காட்டு பன்றிகள் கூட்டம் அங்கு வந்தது. இதில் ஒரு காட்டுப்பன்றி, வேலை செய்து கொண்டிருந்த பொன்னுபாண்டியை விரட்டியது.உடனே அலறியடித்து ஓடினார். ஆனால் காட்டுப்பன்றி விடாமல் துரத்தின.

இதில் பொண்ணுபாண்டியை காட்டுபன்றி சூழ்ந்து கொண்டு தாக்கின. இதில் பொண்ணுபாண்டி கால் பகுதியில் காட்டு பன்றி கடித்ததில் அவருக்கு ரத்தம் வடிந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

உடனே அங்கிருந்தவர்கள் தங்களது கைகளில் கம்புகளை எடுத்து சத்தம் போட்டு கொண்டு காட்டு பன்றியை விரட்டினர். இதனால் காட்டு பன்றி பின்வாங்கி காட்டுக்குள் ஓடிச்சென்றது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பொண்ணுபாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக கடையநல்லூர் Ampicillin online அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காட்டு பன்றி, ஒருவரை தாக்கி கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்:நாராயணன்.பஷீர்

Add Comment