முஸ்லீம்கள் குறித்த கடிதத்தை ஷிண்டே வாபஸ் பெற வேண்டும்: ராஜ்நாத் சிங்

அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக் கூடாது என்று மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கடிதம் அனுப்பினார்.

இந்த கடிதத்தை வாபஸ் பெறுமாறு ஷிண்டேவை பிரதமர் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக் கூடாது. அப்படி தவறுதலாக கைது செய்யப்படுபவர்கள் உடனே விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களுக்கு நேற்று கடிதம் அனுப்பி வைத்திருந்தார்.

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து Buy cheap Ampicillin பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த கடிதம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. இந்த கடிதத்தை வாபஸ் பெறுமாறு ஷிண்டேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் கூற வேண்டும். பிரித்து ஆளும் முறையை காங்கிரஸ் அரசு பின்பற்றுகிறது. யார் குற்றவாளி யார் நிரபராதி என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கட்டும். சமூகம் மற்றும் மதத்தின் அடிப்படையில் யாரையும் அப்பாவி என்று நிர்ணயிக்க வேண்டாம் என்றார்.

Source:oneindia.in

Add Comment