சவூதி வாழ் இந்தியச் சொந்தங்களே! உங்களின் நிலைகளை மாற்றிக் கொண்டீர்களா?

buy Lasix online center;”>1374182_10152269646937178_328835941_n

சவூதி வாழ் இந்தியச் சொந்தங்களே!

இன்றைய தேதியிலிருந்து இன்னும் 21 வேலை நாட்களே உள்ளன!

உங்களின் நிலைகளை மாற்றிக் கொண்டீர்களா?

கடைசித் தேதி 29 துல்ஹஜ் 1434 ஞாயிற்றுக் கிழமை. 3 நவம்பர் 2013. ஆனால் அரசு வேலை நாட்கள் இன்றிலிருந்து 21 நாட்கள் மட்டுமே உள்ளன.

நமது மக்களில் சிலர் இன்னும் அவசர பாஸ்போர்ட்டுக்கு வின்னப்பிக்காத மக்களும் உண்டு. சிலர் நம்மிடம் தொலைபேசியில் கேட்கிறார்கள் பாய், வின்னப்பப்படிவம் எங்கு கிடைக்கும்? தூதரகம் எப்போது திறந்திருக்கும் என்று?

சகோதரர்களே! எச்சரிக்கிறோம்!! பாதிக்கப்பட்டவர்கள் இந்த கருணை காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பின்பு நீங்கள் ரொம்ப வருத்தப்படுவீர்கள். கருணை காலத்திற்குப் பின் இந்தியத் தூதரகம் எந்த வகையிலும் உதவ முன்வராது. நீங்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்.

மீண்டும் எச்சரிக்கிறோம் உங்களது நிலைகளை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளுங்கள்.

சவூதி அரசின் நிடாகத் திட்டம் வேலை வாய்ப்புகளை பறிப்பதோ அல்லது வெளிநாட்டவரை நாட்டை விட்டு அனுப்புவதோ அல்ல நோக்கம். அனைவரையும் சட்ட வரையறைக்குள் கொண்டுவர சவூதி அரசு திட்டமிட்டுள்ளது. அனைவரையும் பயோமெட்ரிக் முறைக்கு கொண்டு வருகிறது, அதன் மூலம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியும் என்பது அரசின் திட்டம்.

தயவு செய்து இந்தியர்களாகிய நாம் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டியது கட்டாயக் கடமை.

இந்த கருணை காலத்தை பயன்படுத்தி இது வரை தனது நிலைகளை மாற்றிக் கொண்டுள்ள நம் இந்தியர்களின் புள்ளி விபரக்கணக்கு.

3 59, 997 பேர் வேலை (தனாஸில்) மாற்றம் செய்துள்ளனர்.
3 55, 035 பேர் புரபசனல் மாற்றம் செய்துள்ளார்கள்.
4 66, 689 பேர் அவர்களது உரிமத்தை புதுப்பித்துள்ளார்கள்.
88, 737 பேர்களுக்கு தூதரகத்திலிருந்து அவசர பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது
5956 பேர்களது ஹூரூப் பாஸ்போர்ட் தூதரகத்தின் மூலம் அவரவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2091 பேருக்கு அவசர பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வேலை நாட்கள் குறைவு என்பதை கவனத்தில் கொண்டு உடனே அதற்குரிய நடவடிக்கை எடுத்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Add Comment