2 குடும்ப கவலைகள்!

தலைப்புக்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை. சாதாரண மனிதர்களாகிய நம் எல்லோர் குடும்பங்களும் பட வேண்டிய இரு கவலைகள் பற்றி இந்த வாரம்.


கவலை 1:

என் இளம் நண்பர்கள் தமக்குக் குழந்தை பிறந்ததைச் சொன்னதும் நான் வாழ்த்துச் சொல்லிவிட்டு அடுத்து மறக்காமல் குழந்தையின் தாயிடம் வற்புறுத்திச் சொல்லும் விஷயம் ஒன்றுதான். குறைந்தது ஒரு வருட காலத்துக்குக் குழந்தைக்குத் தாப்பால் தருவது அவசியம். நேரில் சென்று குழந்தையைப் பார்க்கும் தருணங்களில், தாய்க்குப் பரிசாக தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் கால்ஷியம் மாத்திரைகளைத் தருவதை ஒரு காலத்தில் பின்பற்றி வந்தேன்.

ஒரு தாய் தன் குழந்தைக்கு ஆயுட் காலம் முழுமைக்குமாகத் தரக் கூடிய ஒரே பரிசு தாய்ப்பால்தான். நோய் எதிர்ப்பு சக்தியை குழந்தைக்கு ஏற்படுத்தித் தர அதைவிடச் சிறந்த வேறொன்று இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை.

ஆனால், தாப்பால் தருவதை ஒரு சில வாரங்களிலோ மாதங்களிலோ நிறுத்திவிடும் அவலநிலையைப் பல குடும்பங்களில் அடிக்கடி பார்க்கிறேன். எய்ட்ஸ், பால் ஒவ்வாமை போன்ற தீவிரமான மருத்துவக் காரணங்கள் அபூர்வமானவை. மற்றபடி சொல்லப்படும் சமாதானங்கள் அர்த்தமற்றவை. அதில் முக்கியமானது பால் சுரக்கவில்லை என்பது.குழந்தை குடிக்கக் குடிக்கத்தான் பால் சுரக்கும். தாய் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டால் தான் பால் சுரக்கும். இளம் தாய்க்கு மகிழ்ச்சியான மன நிலையும், குறைவான வேலை பளுவும் இருப்பது அவசியம்.

குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் – கணவன், மாமனார், மாமியார், இன்னும் ஒரே கூரையின் கீழ் இருக்கக்கூடிய இதரச் சோந்தங்கள் எல்லாரும் ஒத்துழைத்தால்தான் ஒரு பெண் நிம்மதியாகக் குழந்தைக்குத் தாய்ப்பால் தரமுடியும். வெளி வேலைக்குப் போகக்கூடிய பெண்களுக்கு அலுவலகத்தில் குழந்தைக் காப்பகங்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் எல்லாம் அக்கறை காட்டாத சமூகம், கடைசியில் நோயாளிகள் நிறைந்த சமூகமாகத்தான் முடியும்.

தாய்ப்பால் ஒரு குழந்தைக்குத் தடங்கலின்றிக் கிடைப்பதற்குப் பெரிய எதிரியாக இருப்பது பேபி ஃபுட் எனப்படும் பால் பவுடர் சமாச்சாரங்கள்தான். எளிதில் கலக்கி புட்டியில் கொடுத்து விடும் வசதிக்காக குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே சிலர் ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தைக்கு பேபி ஃபுட்டின் சுவை கிடைத்துவிட்டால், தாய்ப்பால் பிடிக்காமல் போய்விடும். அறுபதுகள் முதல் எழுபதுகள், எண்பதுகள் வரை பல மருத்துவர்கள், கொழு கொழு குழந்தை தேவை என்ற பெற்றோரின் ஆசையைப் பயன்படுத்தும் பேபி ஃபுட் நிறுவனங்களின் ஏஜண்ட்டுகளாகவே வேலை பார்த்தார்கள். இது தவறு என்ற விழிப்பு உணர்ச்சி மருத்துவத்துறையில் இன்று ஆழமாகப் பதிந்திருக்கிறது.

ஆனால், பேபி ஃபுட் கம்பெனிகள் இன்றும் பல விதங்களில் தாய்ப்பாலுடன் போட்டிப் போட்டு அதை முறியடிக்க முயன்று கொண்டே இருக்கின்றன. அவை தம் விளம்பரங்களில் தாய்ப்பாலுக்கு நிகரானது என்றோ, தாய்ப்பாலின் அத்தனை நலங்களும் அடங்கியது என்றோ சொல்வது துளிக்கூட உண்மையல்ல. தாய்ப்பாலுக்கு நிகரான எதுவும் இன்னும் மனிதனால் கண்டுபிடிக்கப் படவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நான்கு இந்திய பல்கலைக்கழகங்களுடன் பேபி ஃபுட் தயாரிக்கும் நெஸ்லே கம்பெனி போட்டிருக்கும் ஒப்பந்தம் கவலை தருகிறது.

கிராமங்களில் இருக்கும் அரசாங்கப் பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவப் பெண்களுக்கு சத் துணவு பற்றிய அறிவைப் புகட்டுவதற்கான திட்டத்தை இந்த கம்பெனி, பஞ்சாப் விவசாயப் பலக்லைக்கழகம், ஹரியானா பால் வள மேம்பாட்டு நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், உத்தரகண்ட் ஜி.பி.பந்த் விவசாயப் பல்கலைக்கழகம் ஆகிய பொது அமைப்புகளின் உதவியுடன் நிறைவேற்றும் என்பதே ஒப்பந்தம். அடுத்த சில வருடங்களில் தாமையை அடையும் வாப்பில் இருக்கும் இளம்பெண்களை முன்கூட்டியே வசப்படுத்தி பிரசாரம் செவதே அசல் நோக்கமாக இருக்க முடியும்.

ஏனென்றால் சத்துணவு பற்றிய விழிப்புணர்வு வகுப்பில் என்ன சொல்லித்தரப் போகிறீர்களென்று கேட்டால், அந்த விவரங்களைத் தர கம்பெனியும் பல்கலைக்கழகங்களும் மறுத்துள்ளன. தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பள்ளிச் சிறுமிகளுக்கு நடத்தப் போகும் வகுப்பு கள் பற்றிய விவரங்களைத் தரும்படி பஞ்சாப் பல்கலைக்கழகத்தை, இந்திய தாப்பால் ஊக்குவிப்பு கூட்டமைப்பு கோரியது. விவரங்களைத் தெரிவிக்கலாமா என்று பல் கலைக் கழகம் நெஸ்லே கம் பெனியின் அனுமதி கேட் டது. அது அனுமதி மறுத்து விட்டது. ஒப்பந்த விவரங்கள் ரகசியமா னவை; அவற்றை வெளியிடமுடியாது என்று பல்கலைக் கழகமும் பதில் சோல்லிவிட்டது. நெஸ்லே கம்பெனியின் அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் சத்துணவு திட்டம் பற்றிய விவரங்களை வெளியிட்டால் தங்கள் வர்த்தக நலன்கள் பாதிக்கப்படும் என்றும் போட்டியாளர்களுக்குச் சாதகம் ஏற்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். பள்ளிச் சிறுமிகளுக்கு ஊட்டச்சத்து பற்றி வகுப்பு எடுப்பதில் கம்பெனியின் வர்த்தக நலன் எங்கே வருகிறது?

இந்தத் திட்டத்துக்காக பல்கலைக் கழகத்துக்கு கம்பெனி தரும் பணம் வெறும் இரண்டரை லட்சம் ரூபாய். ஆனால், தொலை நோக்கில் இதன் விளைவுகள் ஆபத்தானவை. கிராமப்புறங்களில் தாய்ப்பால் பழக்கத்தைக் குறைத்தால்தான் பேபிஃபுட் விற்பனையை அங்கே அதிகரிக்கமுடியும் என்ற வர்த்தக நோக்கத்துக்காக, சமூக அக்கறை, விழிப்புணர்வு என்ற புதிய ரூட்டுகளை கம்பெனிகள் பயன்படுத்த அனுமதிப்பது மிக மிக ஆபத்தானது.

கவலை 2:

இது நம் வீடுகளில் பயன்படுத்தும் காய்கறிகள், கனிகள் பற்றிய கவலை. அவற்றின் விலை உயர்வதைப் பற்றியல்ல. எவ்வளவு மலிவான விலைக்கு விற்றாலும் சரி, நாம் வாங்குவது காய்கனியா, விஷமா என்ற பிரச்னையைப் பற்றியது இந்தக் கவலை.

டெல்லியைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாஸ் என்ற நுகர்வோர் நல அமைப்பு நாடு முழுவதும் விற்கப்படும் காய்கள், பழங்களில் மாதிரிகளை எடுத்து பரிசோதித்தது.

சோதனை முடிவுகள் பயங்கரமாக இருந்தன. இந்தியாவில் எப்போதோ தடை செயப்பட்ட பூச்சி மருந்துகளின் எச்சங்கள் எல்லாம் பல காய், கனிகளில் இருந்தன. அதாவது இந்தப் பூச்சிக் கொல்லி விஷங்கள் இன்னமும் பயன் பாட்டில் இருந்துகொண்டிருப்பதை இது காட்டுகிறது.

பூச்சிக் கொல்லி விஷங்களின் எச்சம் எந்த அளவு வரை இருந்தால் மனிதர்களுக்கு ஆபத்தில்லை என்று ஐரோப்பிய யூனியன் வரையறுத்திருக்கிறது. இந்தியாவில் சோதித்த காய் கனிகளில் அந்த அளவு ஐரோப்பாவில் அனுமதித்த அளவைவிட 750 மடங்கு அதிகமாக இருக்கிறது. காலிஃபிளவர், வெண்டைக் காய், கத்தரிக்காய், பாகற்காய், கீரை, உருளைக்கிழங்கு, வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை என்று பலவற்றிலும் பூச்சிக்கொல்லி விஷக்கழிவின் அளவு அதிகமாகவே உள்ளது.

இதைல் பாரதியான், க்ளோர்டென், எண்ட்ரின், ஹெப்டகோர் முதலிய இந்த பூச்சிக்கொல்லி விஷ எச்சங்களைக் காய்கனிகளுடன் சேர்த்து நாம் உட் கொண்டால், நரம்பு நோய்கள்,தோல் நோய்கள், சிறுநீரக பாதிப்பு, புற்று நோய் போன்ற சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இது பற்றிய ஒரு பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. அரசுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளது. இப்படிப்பட்ட பிரச்னைகளில் நம் கவனம் குவியாமல், மேலெழுந்தவாரியானவற்றில் ஆர்வம் காட்ட நம்மைத் திசை திருப்பும் வேலையை நம் அரசியல்வாதிகளும் மீடியாவும் செதுவருகின்றன. பேபி பவுடர், பூச்சிமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பிரும்மாண்டமான பன்னாட்டு கம்பெனி கள் என்பதால், செய்திகளை தமக்குச் சாதகமாகத் திரிக்கவும் மறைக்கவும் தங்கள் வணிகச் செல் வாக்கை அவற்றால் பயன்படுத்த முடிகிறது.

இப்போதைக்கு நமக்குள்ள உடனடி தீர்வுகள்: ஒவ்வொரு குடும்பமும் தாப் பால் கொடுப்பதில் பிடிவாதம் காட்டும் Viagra online குடும்பமாக மாற வேண் டும். காய்கனிகளை நன்றாகக் கழுவிவிட்டு, தடித்த தோல்களை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதன் மூலம் பூச்சிக் கொல்லிக் கழிவின் விளைவுகளைக் குறைக்கலாம்.

தொலை நோக்குத் தீர்வு: இத்தகைய அடிப்படைப் பிரச்னைகளில் ஆர்வமுள்ள நேர்மையான அரசியல்வாதிகளையும் மீடியா வையும் நம் குடும்பங்களில் இருந்து உருவாக்க நாம்தான் பாடுபடவேண்டும்.

Add Comment