துபையில் சிறுநீர் கழித்ததற்காக 500 DHS அபராதம் 42 பேர் பிடிபட்டனர்..!

dubai1

துபாய் நகரை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு பல்வேறு Ampicillin No Prescription காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது, துபாய் நகராட்சியின் 150 இன்ஸ்பெக்டர்களோடு 700 பொதுமக்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதால் நிறைய நபர்கள் பிடிபடுகின்றனர்,

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் காரிலிருந்து சிகரெட் உள்ளிட்ட பொருட்களை சாலையில் தூக்கி எறிந்ததற்காக 3270 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியில் வண்டி கழுவியதற்காக 402 நபர்களுக்கும் எச்சில் துப்பியதற்காக 288 நபர்களுக்கும் பான் பராக் துப்பியதற்காக 51 நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

பொது இடங்களில் சிறு நீர் கழிப்பது, எச்சில் துப்புவது, சிகரெட் துண்டுகளை சாலையில் போடுவது போன்றவற்றுக்கு 500 திர்ஹம்களும் (சுமார் 8000 இந்திய ரூபாய்) பான் பராக் துப்புவதற்கு 1000 திர்ஹம்களும் (16000 இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்படுகிறது. வழமையான அரசு அலுவலர்களோடு பொதுமக்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவதால் நிறைய நபர்கள் பிடிபடுவதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது.

Add Comment