மதுரை- செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கடையநல்லூர் எம்எல்ஏ., வலியுறுத்தல்

குற்றால சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வாசனிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.கடையநல்லூரில் தொகுதி நிதி ஒதுக்கீடு தொடர்பாக கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், பஞ்., பகுதிகளிலும், டவுன் பஞ்., பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து காங்., நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்., நிர்வாகிகளிடம் எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடையநல்லூர் நகராட்சியில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆண்டுதோறும் வழக்கமாக கொண்டாடப்பட்டு வரும் காமராஜர் பிறந்த நாள் விழா கடையநல்லூரில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.கடையநல்லூர் நகராட்சியில் Buy Viagra தேசிய நெடுஞ்சாலையில் இடைகாலில் இருந்து மங்களாபுரம் வரை சாலைகள் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து தொகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைகளும் அகலப்படுத்தப்படும்.தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கப்பட்டு விட்டதையடுத்து குற்றாலத்திற்கு பயணிகள் கூட்டம் அதிகமாக வரக்கூடும்.

இதனை கருத்தில் கொண்டு மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் நலன் கருதி சிறப்பு பயணிகள் ரயில் விட வேண்டுமென மத்திய அமைச்சர் வாசனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரயில்வேதுறை அமைச்சர் மம்தாவிடம் இதுதொடர்பாக பேச இருப்பதாக அமைச்சர் வாசன் உறுதியளித்துள்ளார்.மேலும் மதுரை, ராஜபாளையம், கோவை, சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து குற்றாலத்திற்கு விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேருவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

Add Comment