எம்எல்ஏ., எழுதிய புத்தகம்10ம் தேதி வெளியீட்டு விழா

தமிழக சட்டசபை காங்.,கொறடா பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., எழுதிய பயங்கரவாதம் குறித்த புத்தக வெளீயிட்டு விழா நாளை (10ம் தேதி) நடக்கிறது.கடையநல்லூர் எம்எல்ஏ., பீட்டர் அல்போன்ஸ் பயங்கரவாதம் குறித்தும், இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்தும் Lasix No Prescription புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாளான வரும் 10ம் தேதி எம்எல்ஏ., அலுவலகத்தில் மாலையில் நடக்கிறது.நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் இப்ராகிம் தலைமை வகிக்கிறார். மாநில செயலாளர் ஆலடி சங்கரைய்யா, வட்டார காங்., தலைவர்கள் கிளாங்காடு மணி, ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட காங்., துணைதலைவர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகிக்கின்றனர்.

கீழப்பாவூர் யூனியன் தலைவர் காமராஜ் புத்தகத்தை வெளியிட கடையநல்லூர் முன்னாள் யூனியன் தலைவர் அய்யாத்துரை பெற்றுக் கொள்கிறார்.நிகழ்ச்சியில் மாவட்ட காங்., துணைதலைவர் இடைகால் மாரியப்பன், திருமலைக்குமாரசுவாமி கோயில் அறங்காவலர்குழு தலைவர் அருணாசலம், யூனியன் சேர்மன் சட்டநாதன், டவுன் பஞ்.,தலைவர்கள் ஆய்க்குடி வள்ளிமயில், சிவகிரி போஸ், மாவட்ட காங்., செயலாளர் நவாஸ்கான் உட்பட பலர் பேசுகின்றனர். விழாவில் மாவட்ட காங்., நிர்வாகிகள், இளைஞர் காங்., நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.இத்தகவலை எம்.எல்.ஏ., மேலாளர் புலவர் செல்வராஜ் தெரிவித்தார்.

Add Comment