கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் இருவர் மரணம்!

Iyappan

Kaliappan

கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பூ வியாபாரிகள் இருவர் மரணம்!

கடையநல்லூர் அம்பேத்கார் தெருவை சேர்ந்த வள்ளிநாயகம் மகன் மாரிச்சாமி (வயது 26). இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அய்யப்பன் (23), வேலு மகன் காளியப்பன் (30). 2 பேரும் பூ வியாபாரிகள்.

நேற்று இவர்கள் 3 பேரும் கடையநல்லூரில் உள்ள மங்களசுந்தரி தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றனர். படம் முடிந்ததும் 3 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். மாரிச்சாமி வீட்டிற்கு நடந்து சென்றார்.

காளியப்பனும், அய்யப்பனும் மொபட்டில் சென்றனர். மொபட்டை காளி ஓட்டினார். தியேட்டர் முன்பு செல்லும் போது அந்த வழியாக வந்த பைக்கும், மொபட்டும் ஒன்றுக்கொன்று மோதியது. இதில் அய்யப்பன் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காளியப்பன் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த உசிலம்பட்டியை சேர்ந்த மாசானம் மகன் கண்ணன், மதுரையை சேர்ந்த தங்கம் மகன் கண்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் கடைய நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபா பதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் காளியப்பன் இறந்தார். மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்கப்பட்டு buy Cialis online வருகிறது.

உசிலம்பட்டியை சேர்ந்த கண்ணன் தென்காசியில் நெல்அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இயந்திரம் பழுதாகவே அதற்கான பொருட்கள் வாங்குவதற்காக புளியங்குடிக்கு கண்ணன் சென்றுள்ளார்.

கடைய நல்லூர் மங்களசுந்தரி தியேட்டர் முன்பு செல்லும் போது காளியும், அய்யப்பனும் படம் பார்த்து விட்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டுள்னர். காளியப்பன் சரியாக மொபட்டை ஓட்டாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காளியப்பனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பைக் விபத்தில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்:நாராயணன்,பஷீர்

Add Comment