தென்காசியை தலைமையிடமாககொண்டு புதிய மாவட்டம் வேண்டும்: இந்திய தவ்ஹீத் வலியுறுத்தல்

தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.ந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் தென்காசி பாபக்கி தங்கள் மதரஸாவில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அலி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுலைமான் சேட் வரவேற்றார். Buy cheap Bactrim மாநில தலைவர் எஸ்.எம்.பாக்கர் இஸ்லாம் கூறும் மனித நேயம் பற்றி பேசினார். மாநில செயலாளர் செங்கிஸ்கான், அப்துல்காதர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். தென்காசி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு துறை வாரியாக கூடுதல் டாக்டர்கள், கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். தென்காசி-சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கிட வேண்டும். அறிவிப்பு செய்து நிறுத்தப்பட்ட ஈரோடு ரயிலை உடனே இயக்க வேண்டும். தென்காசி ரயில்வே மேம்பால பணியை துரிதப்படுத்த வேண்டும்.தென்காசி நகராட்சி சுகாதார பணியாளர்கள் நகரை சுத்தமாக வைத்திருக்க உதவிட வேண்டும். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தென்காசி நகர தலைவர் செய்யதலி நன்றி கூறினார்.

Add Comment