முஹம்மது லியாகத் அலீ மன்பஈ ….

முஹம்மது லியாகத் அலீ மன்பஈ  அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தம் தோழர்களை நோக்கி, ‘நீங்கள் மக்கள் நடமாடும் வழிகளில் உட்காருவதை உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்’ என்று கூறினார்கள். அப்பொழுது ‘நாயகமே! நாங்கள் அங்கு உட்காராமல் இருக்க முடியாதே! ஏனெனில் அவ்விடங்களில்தான் நாங்கள் பல பிரச்சனைகளையும் பேசிக் கொள்வோம்’ என்று தோழர்கள் கூறினார்கள். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த பதில்: ‘நீங்கள் அந்த பாதையில்தான் உட்கார வேண்டுமென்றால், அவற்றுக்குரிய உரிமை – கடமைகளைக் கொடுத்து விடுங்கள்.’  ‘அப்படியா?’ பாதைகளுக்குரிய உரிமைகள் யபவை?’ என மீண்டும் தோழர்கள் வினவினார்கள். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பாதைகளுக்குரிய உரிமைகள் ஐந்து உள்ளன. 1. கண்களைத் தாழ்த்திக் கொள்ளுதல், 2. துன்பத்தைத் தடுத்தல், 3. ஸலாமுக்கு பதில் சொல்லுதால், 4. நன்மையை ஏவுதல், 5. தீமையை நடைபெறாமல் தடுத்தல்’ என்று விளக்கமளித்தார்கள்.  அபூ ஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்நிகழ்சி ஸஹீஹுல் புகாரியிலும், ஸஹீஹ் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (மிஷ்காத்: 4640)  இந்த ஹதீஸில் உயரிய பல போதனைகள் அடங்கியுள்ளன.  பாதைகளில் உட்காருவது கூடாது என எச்சரிக்கப்படுகிற இடங்கள் என்று மக்கள் வந்து போக்கூடிய கடைத்தெரு, மரத்தடி நிழல், திண்ணை போன்ற ஃபித்னா பஜார்களைக் கூறலாம். இங்கெல்லாம் சிலர் எப்போதுமே உட்கார்ந்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு வீடுகளில் தங்கியிருக்க முடியாது. எனவே பொது இடங்களில் வந்து அமர்ந்து கொள்வார்கள். இதற்காகவே சில ஊர்களில் பள்ளிவாசல் முன்பு திண்ணை கட்டி வைத்து, அதற்கு ‘சோம்பேரி மடம்’ என்று பெயரும் சூட்டப்படும். அங்கு போய் அமர்ந்தாலே புறம், கோள் போன்ற பல பாவங்களும் ஆரம்பமாகிவிடும்.  எனவேதான் ஏந்தல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் இயம்பினார்கள். அந்த தீமைகளை விட்டும் விலகுவதற்குரிய பரிகாரம் அடுத்த வாக்கியத்தில் வருகிறது.  ‘நாங்கள் உட்காராமல் இருக்க இயலாதே’ என்று தோர்கள் சொன்னபோது, அப்படியானால் அதனால் ஏற்படும் பாவங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறார்கள்.  பொது இடங்களில் அமர்வதால் ஏற்படக்கூடிய குற்றங்கள் ஏராளமாக உள்ளன. எனினும் அவற்றில் முக்கியமானவற்றை தவிர்ந்துகொள்வதற்குரிய வழிகளாக ஐந்தைக் குறிப்பிடுகிறார்கள்.  இந்த அறிவுரையிலுள்ள மிக முக்கிமான விஷயம், கண்களைப் பேணிக் காத்தல். அந்நியப்பெண்கள் அந்த வழியாகப் போகும்போது இவள் யார்? எங்கு போகிறாள்? எதற்குப் போகிறாள்? என்ற சிந்தனை அங்கு அமர்ந்திருப்போருக்கு ஏற்படத்தான் செய்யும்.  பொதுவாகப் பெண்கள் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் அவளை அந்நிய ஆண்களின் கண்களுக்கு ஷைத்தான் அலங்காரமாகக் காட்டுவான். இந்நிலையில் அங்கு அமர்ந்திருப்போர் தெருவில் செல்லும் பெண்களை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தால்தான் பாவங்களிலிருந்து தப்ப முடியும். எனவே முதல் ஒழுக்கம் பார்வையை தாழ்த்துதல் தான்.  இரண்டாவது: துன்பத்தைத் தடுத்தல். அதாவது தம் மூலமாக யாருக்கும் நாவாலோ, கரத்தாலோ, சைக்கினையாலோ எந்த துன்பமும் ஏற்படக்கூடாது. அதே போல் போவார், வருவோரில் யாரும் பிறருக்கு அநீதி இழைக்கக் கண்டால் அதைத் தடுப்பதும் கடமை.  மூன்றாவது: அங்கு செல்வோர் தமக்கு ஸலாம் கூறின், அதற்கு பதில் உரைப்பது அவசியம். பேச்சு சுவாரஸ்யத்தில் அதை மறந்துவிடக் கூடாது.  நான்காவதும், ஐந்தாவதும்: நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் இது மிகப்பெரிய முக்கியமான கடமையாகும். ஏனெனில் பொது இடங்களில் பலரும் வருவார்கள். அவர்களிடத்தில் நற்செயல்கள் இல்லையென்று கண்டால், அவர்களுக்கு அதைச்செய்யத் தூண்டுவதும், அவர்களிடம் தீமையைக் கண்டால் அதைத் தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லீமுடைய கடமையாகவும் அல்லவா இருக்கிறது!  அடேங்கப்பா! இதைச் செய்வதைவிடப் பேசாமல் வீட்டிலேயே இருந்து விட்டுப் போகலாம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் சிறந்தது. அதனால்தான் ஆரம்பத்திலேயே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொது இடங்களில் நீங்கள் உட்கார வேண்டாம் என்று எச்சரித்தார்கள். ‘ஃபித்னா பஜார்’களில் அமர்வோர் இவற்றைச் சிந்திப்பார்களா? அல்லது பாவச்சுமைகளை சுமக்கப்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தம் தோழர்களை நோக்கி, ‘நீங்கள் மக்கள் நடமாடும் வழிகளில் உட்காருவதை உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்’ என்று கூறினார்கள். அப்பொழுது ‘நாயகமே! நாங்கள் அங்கு உட்காராமல் இருக்க முடியாதே! ஏனெனில் அவ்விடங்களில்தான் நாங்கள் பல பிரச்சனைகளையும் பேசிக் கொள்வோம்’ என்று தோழர்கள் கூறினார்கள். அதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த பதில்:

‘நீங்கள் அந்த பாதையில்தான் உட்கார வேண்டுமென்றால், அவற்றுக்குரிய உரிமை – கடமைகளைக் கொடுத்து விடுங்கள்.’

‘அப்படியா?’ பாதைகளுக்குரிய உரிமைகள் யபவை?’ என மீண்டும் தோழர்கள் வினவினார்கள். அப்போது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், Ampicillin online ‘பாதைகளுக்குரிய உரிமைகள் ஐந்து உள்ளன. 1. கண்களைத் தாழ்த்திக் கொள்ளுதல், 2. துன்பத்தைத் தடுத்தல், 3. ஸலாமுக்கு பதில் சொல்லுதால், 4. நன்மையை ஏவுதல், 5. தீமையை நடைபெறாமல் தடுத்தல்’ என்று விளக்கமளித்தார்கள்.

அபூ ஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்நிகழ்சி ஸஹீஹுல் புகாரியிலும், ஸஹீஹ் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (மிஷ்காத்: 4640)

இந்த ஹதீஸில் உயரிய பல போதனைகள் அடங்கியுள்ளன.

பாதைகளில் உட்காருவது கூடாது என எச்சரிக்கப்படுகிற இடங்கள் என்று மக்கள் வந்து போக்கூடிய கடைத்தெரு, மரத்தடி நிழல், திண்ணை போன்ற ஃபித்னா பஜார்களைக் கூறலாம். இங்கெல்லாம் சிலர் எப்போதுமே உட்கார்ந்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு வீடுகளில் தங்கியிருக்க முடியாது. எனவே பொது இடங்களில் வந்து அமர்ந்து கொள்வார்கள். இதற்காகவே சில ஊர்களில் பள்ளிவாசல் முன்பு திண்ணை கட்டி வைத்து, அதற்கு ‘சோம்பேரி மடம்’ என்று பெயரும் சூட்டப்படும். அங்கு போய் அமர்ந்தாலே புறம், கோள் போன்ற பல பாவங்களும் ஆரம்பமாகிவிடும்.

எனவேதான் ஏந்தல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் இயம்பினார்கள். அந்த தீமைகளை விட்டும் விலகுவதற்குரிய பரிகாரம் அடுத்த வாக்கியத்தில் வருகிறது.

‘நாங்கள் உட்காராமல் இருக்க இயலாதே’ என்று தோர்கள் சொன்னபோது, அப்படியானால் அதனால் ஏற்படும் பாவங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துகிறார்கள்.

பொது இடங்களில் அமர்வதால் ஏற்படக்கூடிய குற்றங்கள் ஏராளமாக உள்ளன. எனினும் அவற்றில் முக்கியமானவற்றை தவிர்ந்துகொள்வதற்குரிய வழிகளாக ஐந்தைக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த அறிவுரையிலுள்ள மிக முக்கிமான விஷயம், கண்களைப் பேணிக் காத்தல். அந்நியப்பெண்கள் அந்த வழியாகப் போகும்போது இவள் யார்? எங்கு போகிறாள்? எதற்குப் போகிறாள்? என்ற சிந்தனை அங்கு அமர்ந்திருப்போருக்கு ஏற்படத்தான் செய்யும்.

பொதுவாகப் பெண்கள் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தால் அவளை அந்நிய ஆண்களின் கண்களுக்கு ஷைத்தான் அலங்காரமாகக் காட்டுவான். இந்நிலையில் அங்கு அமர்ந்திருப்போர் தெருவில் செல்லும் பெண்களை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தால்தான் பாவங்களிலிருந்து தப்ப முடியும். எனவே முதல் ஒழுக்கம் பார்வையை தாழ்த்துதல் தான்.

இரண்டாவது: துன்பத்தைத் தடுத்தல். அதாவது தம் மூலமாக யாருக்கும் நாவாலோ, கரத்தாலோ, சைக்கினையாலோ எந்த துன்பமும் ஏற்படக்கூடாது. அதே போல் போவார், வருவோரில் யாரும் பிறருக்கு அநீதி இழைக்கக் கண்டால் அதைத் தடுப்பதும் கடமை.

மூன்றாவது: அங்கு செல்வோர் தமக்கு ஸலாம் கூறின், அதற்கு பதில் உரைப்பது அவசியம். பேச்சு சுவாரஸ்யத்தில் அதை மறந்துவிடக் கூடாது.

நான்காவதும், ஐந்தாவதும்: நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும் இது மிகப்பெரிய முக்கியமான கடமையாகும். ஏனெனில் பொது இடங்களில் பலரும் வருவார்கள். அவர்களிடத்தில் நற்செயல்கள் இல்லையென்று கண்டால், அவர்களுக்கு அதைச்செய்யத் தூண்டுவதும், அவர்களிடம் தீமையைக் கண்டால் அதைத் தடுப்பதும் ஒவ்வொரு முஸ்லீமுடைய கடமையாகவும் அல்லவா இருக்கிறது!

அடேங்கப்பா! இதைச் செய்வதைவிடப் பேசாமல் வீட்டிலேயே இருந்து விட்டுப் போகலாம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் சிறந்தது. அதனால்தான் ஆரம்பத்திலேயே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொது இடங்களில் நீங்கள் உட்கார வேண்டாம் என்று எச்சரித்தார்கள். ‘ஃபித்னா பஜார்’களில் அமர்வோர் இவற்றைச் சிந்திப்பார்களா? அல்லது பாவச்சுமைகளை சுமக்கப்

Add Comment