கடையநல்லூரில் TNTJ சார்பில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்!

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்.கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்காநகர் கிளையின் சார்பில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை ரோட்டில் 01.11.2013 வெள்ளிக்கிழமை இரவு 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்க்கு கிளை தலைவர் ஜாஹிர் ஹுஸைன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாவட்ட துணை செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லா அவர்கள் ’இன்னும் ஏன் உறக்கம்?’ என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைகுழு Buy Amoxil Online No Prescription உறுப்பினர் M.S.சுலைமான் அவர்கள் இளைஞர் சமுதாயம் எங்கே செல்கிறது?’ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இறுதியில் மக்காநகர் கிளை துணை தலைவர் S.A. செய்யதலி அவர்கள் நன்றிவுரை நல்கினார்கள்.

இறுதியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. கடந்த திமுக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முஸ்லீம்களுக்கு 7% இட இதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று இப் பொதுக்கூட்டம் வலியுறுத்துகின்றது.

2. மத்தியில் 10%, மாநிலத்தில் 7% தனி இடஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் எதிர்வரும் ஜனவரி 28, 2014 அன்று சென்னை,கோவை,திருச்சி,நெல்லை ஆகிய பகுதிகளில் சிறை செல்லும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் நெல்லையில் நடைபெறும் போராட்டத்திற்கு முஸ்லீம்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3. கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை அமைந்துள்ள சுடுகாட்டில் ஏற்படும் புகை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஆஸ்த்மா,காச நோய் மற்றும் தொழு நோய்கள் ஏற்படுகிறது. எனவே சுடுகாட்டு சுற்றுச் சுவரை உயரமாக கட்டித் தரும்படி நகராட்சியை இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

4. கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களையும் தோண்டி குண்டும் குழியுமாக ஆக்கி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் நகராட்சியை வன்மையாக கண்டிக்கிறோம். சாலை போடும் பணியை துரிதமாக்குமாறும் நகராட்சியை கேட்டுக் கொள்கின்றோம்.மேலும் 32 வது வார்டுக்கு உட்பட்ட ரஹ்மானியாபுரம் 10,11 வது தெருக்கள் கடந்த 15 ஆண்டுகளாக சாலை போடப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க நகராட்சியை கேட்டுக் கொள்கின்றோம்.

5. மக்காநகர் பகுதிக்குட்பட்ட 32,33 வது வார்டுகளில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்தப் பகுதியில் மின்விளக்குகளை விரைவாக அமைத்து தரும்படி நகராட்சியை இப்பொதுக் கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.

6. தென்காசியில் கட்டப்பட்டு பல மாதங்களாக போக்குவரத்திற்கு திறக்கபடாமல் இருக்கும் இரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என மத்திய, மாநில அரசுகளை இப் பொதுக்கூட்டம் மூலம் எச்சரிக்கை செய்கிறது.

DSC_0192

DSC_0193 DSC_0196

தகவல்:குறுஞ்சி சுலைமான்

Add Comment