தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 5 இலட்சம் பேர் சிறை செல்லும் போரட்டம்

ஜனவரி 28 முஸ்லீம்கள் சிறை செல்லும் போராட்டம்

கடையநல்லூரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறியதாவது..

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத்தருவோம் என்றும் ஜெயலலிதா அவர்கள் தனது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு பத்துசதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றும் நீதிபதி ராஜேந்திர சச்சார் ஆகிய கமிட்டிகளின் பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசு காலதாமதம் செய்வதை கண்டித்தும் வரும் 2014 ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய தமிழகத்தின் நான்கு பெருநகரங்களில் மாபெரும் சிறை செல்லும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இதில் நெல்லை மாவட்டத்தில் நடை பெறக்கூடிய சிறை செல்லும் போராட்டத்தில் தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை இராமநாதபுரம் தேனி திருவனந்தபுரம் (கேரளா) ஆகிய மாவட்டங்களிலிருந்து 5 லட்சம் முஸ்லிம்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுவை
புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அதே 2014 ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை அன்று புதுவை மாநிலத்திலும் சிறை செல்லும் போராட்டம் நடத்த உள்ளோம்.

DSC_0204

ராகுல் காந்தி கருத்துக்கு முஸ்லிம்கள் கண்டனம்:
உத்திரபிரதேச மாநிலம் முஸாபர் நகர் கலவரத்தில் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.அவர்களுக்கு தக்க பாதுகாப்பபும் நிவாரணமும் அளிக்க தவறிய மத்த்pய அரசு பாதிக்கப்பட்ட முஸ்;லிம்களை பாகிஸ்தான் உளவாளிகளோடு ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தியின் முஸ்லிம் விரோதப் போக்கை முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.ஆதாரமற்ற அவதூறு பேச்சுக்களை முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்தால் வருகின்ற தேர்தலில் தக்க பாடம புகட்டுவோம் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

பீகார் தலைநகர் பாட்னா குண்டு வெடிப்பு

பீகார் தலைநகர் பாட்னாவில் 5 இடங்களில் குண்டு வெடித்தது.பொதுவாக அரசியல் தலைவர்கள்; பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடித்தால் அது எதிர்கட்சிகளை சாடுவதற்;கும் அவர்கள் மீது பழி போடுவதற்கும்; காரணியாகிவிடுகிறது.அத்துடன் மதவாத கூட்டணியாக இருக்கும் பாஜக நடத்தும் நிகழ்ச்சியில் குண்டு வெடித்தால் இஸ்லாமியர்கள் மீது பலி போடுவதற்கு ஏற்றதாக மாறிவிடுகிறது.இதன் மூலம் பாதிக்கப்படும் கட்சிக்கு மக்களின் அனுதாபமும் ஓட்டும் கிடைத்து விடுகிறது.இது பொதுவான நடைமுறையாகும்.இந்த நடைமுறையை அப்பட்ட நாடகமாக நடத்திய பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் மோடி பிரதமராக முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

DSC_0173

முஸ்லிம்களுக்கு பாஜக இட ஒதுக்கிடு அளித்தால்….

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தால் பா.ஜ.க.வை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும் என்ற கருத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து அல்ல.

பா.ஜ.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடஒதுக்கீடு அல்லாத அதை விட முக்கியமான பிரச்சினைகள் உள்ளன.
பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தது, பொது சிவில் சட்டம், முஸ்லிம்கள் மீது போலி என்கவுண்டர், முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போடுதல் உள்ளிட்ட கொடுஞ்செயல்களைச் செய்துள்ள பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தாலும் பா.ஜ.க.வை ஆதரிக்க மாட்டோம் என்பது தான் தவ்ஹீத் ஜமாத்தின் கருத்தாகும்.

ஏற்காடு இடைத்தேர்தலில் கலைஞர் எங்களின் இயக்கத்தின் Amoxil online ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதிய போது பா.ஜ.க.வுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கும் திமுகவை ஆதரிப்பதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் பதில் அளித்தோம்.

பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டுவோரையே ஆதரிக்காத எங்கள் ஜமாஅத் எந்தக்காலத்திலும் பா.ஜ.க.வை ஆதரிக்காது. இது எங்கள் பல்வேறு செயற்குழு, பொதுக்குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

முஸாஃபர் நகர் கலவரம்

உத்தரபிரதேசம் முஸாஃபர் நகர் கலவரம் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் நரேந்திர மோடி அமைச்சரவையில் இருந்த அமீத்ஷா உ.பி. பாரதீய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சொராபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் சம்பந்தப்பட்ட இவரை குஜராத்தில் நுழையக் கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இத்தகைய கலவரப் பின்னணி உள்ள ஒருவர் பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் இந்தக் கலவரம் நடைபெற்றுள்ளது. இந்துத்துவா சக்திகளின் சதியை உரிய முறையில் உளவுத்துறை மூலம் கண்டறிந்து கலவரத்தைத் தடுக்க சமாஜ்வாதி அரசு தவறிவிட்டது. இந்தக் கலவரத்தில் 48 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் 30.10.2013 அன்று மீண்டும் ஒரு மதக்கலவரம் பாசிச பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு ஒரு பெண் உட்பட நான்கு முஸ்லிம்கள் கலவரத்திற்கு பலியாகியிருக்கின்றனர்.மத்திய மாநில அரசுகள் இக்குற்றச் செயலில் ஈடுபடும் பயங்கரவாதிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும் அதே நேரததில் பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கியும்,கலவரத்தின் போது பொருளாதாரத்தை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக அடுத்த வேளை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் சிரமப்படக்கூடிய முஸ்லிம்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் மத்திய மாநில அரசுகள் காலதாமதமின்றி உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தல் முறையில் மாற்றம் தேவை

இந்தியத் தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தத் தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலம் நீங்க இதுவே சிறந்த வழிமுறை என்றும் கருதுகிறோம்.

முஸ்லிம்களுக்கு ரிசர்வு தொகுதி

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலித் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை

சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்று அரசை கேட்டுக் கொள்கிறோம்.
தென்காசி ரெயில்வே மேம்பாலம் விரைவில் திறக்க கோரிக்கை.

தென்காசியில் கட்டப்பட்டு பல மாதங்களாக போக்குவரத்திற்கு திறக்கபடாமல் இருக்கும் இரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தென்காசியில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுசெயலாளர் ஆர். ரஹ்மத்துல்லாஹ்.,மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.எஸ் சுலைமான் மாநில செயலாளர் நெல்லை யூசுப் மாவட்ட தலைவர் கே.ஏ செய்யது அலி மாவட்ட செயலாளர் பைசல் மாவட்ட துணை தலைவர் அச்சன் புதூர் சுலைமான்,தாஹா,வல்லம் அஹ்மது,மாணவரணி செயலாளர் சித்தீக், மக்கா நகர் கிளை தலைவர் ஜாஹிர் உசேன் செயலாளர் சிராஜ்தீன் பொருளாளர் சேகனா மற்றும் கடையநல்லூரின் அனைத்து கிளைகளின் நிர்வாகிகள் ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்.

இப்படிக்கு

(ஆர். ரஹ்மத்துல்லாஹ்)
மாநில பொதுச் செயலாளர்

Add Comment