எகிப்து நிலவரம் முபாரக்குக்கு அமெரிக்கா உதவி தேவை இஸ்ரேல் புலம்பல்

எகிப்தில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியால் தலைநகர் கெய்ரோ ஸ்தம்பித்தது. எனினும், அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக மறுத்து வருகிறார். எகிப்து கலவரம் நேற்றும் 8வது நாளாக நீடித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து புறப்பட்ட சுமார் 10 லட்சம் பேர் தலைநகர் கெய்ரோவே நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அதிபர் பதவி விலகக் கோரி அப்போது கோஷம் எழுப்பினர்.

பேரணியில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு ராணுவத்துக்கு அதிபர் உத்தரவிட்டார். ஆனால், ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு என்று கூறியது. இதற்கிடையே எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என முபாரக் அறிவித்தார். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதை ஏற்கவில்லை.

மேலும், உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களை நீக்கிவிட்டு, முக்கிய எதிர்க்கட்சியான முஸ்லிம் பிரதர்ஹுட் சார்ந்தவர்களை அமைச்சராக்குவதாகவும் முபாரக் கூறினார். ஆனால், அதையும் ஏற்க மறுத்ததுடன் முபாரக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நீடிக்கிறது.

இதற்கிடையே, முபாரக்குக்கு ஆதரவாக செயல்படாத அமெரிக்காவுக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவி த்துள்ளது. “முபாரக் அரசு கவிழ்ந்தால் முஸ்லிம் பிரதர்ஹுட் ஆட்சியைப் பிடிக்கும். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை மோசமாகும். உலக நாடுகளுக்கும் buy Amoxil online பிரச்னை அதிகரிக்கும்” என இஸ்ரேல் அமைச்சர் அயூப் கரா தெரிவித்துள்ளார்.

Add Comment