டாஸ்மாக்கின் தீபாவளி வசூல் ரூ.330 கோடியை தாண்டியது!

tasmac(9)

தீபாவளி பண்டிகையன்று டாஸ்மாக் கடைகளில், குடிமன்னர்கள் குவிந்ததால் 3 நாட்களில் மட்டும் மது விற்பனை ரூ.330 கோடியை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.80 கோடி அதிகம்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 6 ஆயிரத்து 696 டாஸ்மாக் கடைகளில் சென்னையில் மட்டும் 450க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
டாஸ்மாக் கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.67 கோடிக்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ரூ.90 கோடிக்கு மேலும் மது விற்பனையாகி வருகிறது.

அதுவும். பண்டிகை காலம் என்றால் மதுமன்னவர்களுக்கு கொண்டாட்டம்தான். நண்பர்கள், உறவினர்களுடன் மது அருந்தி பண்டிகைகளை கொண்டாடுவதால் டாஸ்மாக் கடைகளில், ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்பதை போன்று வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்வதைத்தான் பார்க்க முடிகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை 3 நாட்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.330 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் சுமார் ரூ.43 கோடி மது விற்பனையாகி உள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று மட்டும் ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, தமிழகத்தில் ரூ.250 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மது விற்பனை ரூ.80 கோடி அதிகரித்து உள்ளது.

தீபாவளி பண்டிகை மது விற்பனையில், பிராந்தி மது வகைகள் மட்டும் ரூ.200 Levitra No Prescription கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. பீர் சுமார் ரூ.50 கோடிக்கும், ரம், விஸ்கி, வோட்கா போன்ற மற்ற மதுபான வகைகள் ரூ.70 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது.

Thanks:vikatan

Add Comment