திருமணமா? வேலையா?

பாத்திமுத்து ஸித்தீக், ஹைதராபாத்

ஆண்-பெண் எப்படித்தான் நட்பு என்ற அளவில் பழகினாலும் தீயும், பஞ்சும் நெருங்கிய நிலைதான் என்பதை மனோதத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளும் இந்த சமூகம் இந்தப் போக்கை மட்டும் கண்டு கொள்ளாமல் வாளாவிருக்கிறது என்பதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணித்து, அங்கீகரித்து வரும் டேட்டிங், டேஸ்பெண்டிங், பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் கலாச்சாரம் போன்றவை தெளிவாக்கும்.

தாய்மை எனும் சிறப்பு பெண்களுக்கு மட்டுமே இறைவன் தந்த அருட்கொடை. ஒரு குடும்பத்தின் வாரிசுகளை நல்ல குடிமக்களாக வளர்த்து முன்னேற்றுவதில் தாய் பெரும் பங்கு வகிக்கிறாள். அந்த அரும்பணியை செவ்வனே செய்வதில் நாட்டமின்றி அல்லது புறக்கணித்து விட்டுத்தான், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைகளில் சேர்ந்து பொருளீட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் இன்றைய புதுமைப் பெண்கள்.

தன் சொந்தக் காலில் நிற்பதுதான் பெண்ணுக்குப் பெருமை என்ற அபிப்ராயத்தில் இவர்கள் அறிந்தோ அறியாமலோ, தாங்கள் பெற்றெடுத்த செல்வக் குழந்தைகளைப் பக்குவமாக வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொறுப்பை சரிவரசச் செய்யாமல் தட்டிக்கழித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிர்பந்தம், வாய்ப்பு வசதிகளைப் பொறுத்து வேலைக்குப் போக வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.]

ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை புரட்டும் நமக்கு முதலில் கண்களில் படும் செய்தி காதலில் தோல்வியடைந்த ஆணோ அல்லது பெண்ணோ செய்து கொண்;ட தற்கொலையாக இருக்கும். அல்லது பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான இளம் பெண்ணின் சோகக்கதையாக இருக்கும். அல்லது கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் அவலமாக இருக்கும்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சமூக அநீதிகள் நம்மைத் திகைக்க வைக்கும் அளவுக்கு புள்ளி விபரங்களோடு சிந்திக்க வைக்கும் கட்டுரைகளாகவும், தொலைக்காட்சி செய்திச் சுருளாகவும் வெளிவருகின்றன. இதற்கெல்லாம் ஒரே காரணம் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் எனும் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒன்றாகப் பழகக்கூடிய வாய்ப்புகளை மௌ;ள மௌ;ளத் தெரிந்தோ தெரியாமலோ அளித்து வந்ததுதான்.

பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் இருபாலரும் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் (Co-Education) வாய்ப்பைத் தந்ததில் ஆரம்பித்து, வேலை பார்க்கும் இடம், பயிற்சி பெறும் இடம், பல துறைகளிலும் ஆண்களும், பெண்களும் ஒன்றாகச் சேர்ந்து பழகும் வாய்ப்புகளையும், வசதிகளையும் படிப்படியாக அதிகமாகத் தந்துவிட்டோம். இப்படித் தந்த சுதந்திரம் இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது என்றால் வயதுக்கு வந்த பெண் மக்களை தன்னிச்சையாக பிற ஆண்களோடு நெருங்கிப் பழகுவதைப் பெற்றோர்கள் மனதளவில் விரும்பாவிட்டாலும் வேறு வழியின்றி கண்டும் காணாததுபோல் இருந்துவிடும் அளவுக்கு முற்றியிருக்கிறது.

சமூக தளத்தில் ஆண்-பெண் ஒழுக்கத்தைச் சீரழிக்கும் அனாச்சாரங்களைத் தடுக்கும் பொருட்டு, பெண்களை இயற்கையிலேயே பலவீனமானவர்கள் என்பதைக் காரணங்காட்டி இவர்களுக்கென்று பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி, மகளிர் காவல் நிலையம், பெண்களுக்கென்று தனி வங்கிக் கிளைகள், லேடீஸ் ஸ்பெஷல் பேருந்துகள் ஸ என்றெல்லாம் வலுப்பெற்று வருகின்றன. அதுவும் இந்த மில்லினிய ஆண்டுகளில்!

அன்று பெண்களைச் சீண்டி (Eve Teasing) வம்புக்கிழுத்த காலம் போய் இன்று பெண்களே ஆண்களைச் சீண்டும் (Adam Teasing) உருவாகியிருக்கிறது. பள்ளிப் பிள்ளைகளோ, பாலியல் உறவுகளைப் படமாக்கி வியாபாரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டது என்பதை சில ஆண்டுகளுக்குமுன்; நாட்டையே கூனிக் குறுகச் செய்த டெல்லி பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற சம்பவம் உறுதிப்படுத்துகிறது.

ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் அளவுக்கு அரைகுறை நாகரிக உடைகளைப் பெண்கள் சர்வ சாதாரணமாக அணிந்து வெளியே திரிவதும், பாலியல் பலாத்காரத்துக்கான காரணங்களில் ஒன்று. மென்மையான கூச்ச சுபாவமுள்ள இளைஞர்கள், ‘காதல் வேறு, திருமணம் வேறு. காதலுக்கு மட்டும் நீ சரி, திருமணத்துக்கு நீ ஒத்துவரமாட்டாய்’ என்று பலகாலம் நெருக்கமாகப் பழகிய ஒருத்தியைப் பிரிந்து செல்லும்போது, மனமுடைந்து தற்கொலை முயற்சிக்குத் தள்ளப்படுகிறாள். இந்த மனப்போக்கு சென்னை, மும்பாய், டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாது, பட்டிதொட்டி வரை தொற்றிக்கொண்டு வருகிறது.

ஆண்-பெண் எப்படித்தான் நட்பு என்ற அளவில் பழகினாலும் தீயும், பஞ்சும் நெருங்கிய நிலைதான் என்பதை மனோதத்துவ ரீதியாக ஒப்புக்கொள்ளும் இந்த சமூகம் இந்தப் போக்கை மட்டும் கண்டு கொள்ளாமல் வாளாவிருக்கிறது என்பதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக ஜீரணித்து, அங்கீகரித்து வரும் டேட்டிங், டேஸ்பெண்டிங், பாய் ஃப்ரண்ட், கேர்ள் ஃப்ரண்ட் கலாச்சாரம் போன்றவை தெளிவாக்கும்.

இந்த அனாச்சாரங்களை நியாயப்படுத்துவது போன்றே சிறுகதைகள், புதினங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது பெண்ணுக்கு இயல்பாகவே இருக்க வேண்டிய ஒழுக்கம், கூச்சம், நாணம் ஸ போன்ற லட்சணங்களை பெரும்பாலான பெண்கள் காணாமலாக்கிக் கொண்டிருக்கின்றனரோ என்று தோன்றுகிறது. ஒருசில விதிவிலக்கான குடும்பப் பெண்களிடம் இத்தகைய போக்கு தென்படாவிட்டால் அவளை பத்தாம் பசலி, பட்டிக்காடு என்று பட்டங்கள் சூட்டி பெண்மையைக் கொச்சைப்படுத்தும் போக்கும் உண்டு.

தாய்மை எனும் சிறப்பு பெண்களுக்கு மட்டுமே இறைவன் தந்த அருட்கொடை. ஒரு குடும்பத்தின் வாரிசுகளை நல்ல குடிமக்களாக வளர்த்து முன்னேற்றுவதில் தாய் பெரும் பங்கு வகிக்கிறாள். அந்த அரும்பணியை செவ்வனே செய்வதில் நாட்டமின்றி அல்லது புறக்கணித்து விட்டுத்தான், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைகளில் சேர்ந்து பொருளீட்டுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் இன்றைய புதுமைப் பெண்கள்.

தன் சொந்தக் காலில் நிற்பதுதான் பெண்ணுக்குப் பெருமை என்ற அபிப்ராயத்தில் இவர்கள் அறிந்தோ அறியாமலோ, தாங்கள் பெற்றெடுத்த செல்வக் குழந்தைகளைப் பக்குவமாக வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொறுப்பை சரிவரசச் செய்யாமல் தட்டிக்கழித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

இன்றைய இளைய தலைமுறையினரில் கணிசமான பகுதியினர் குடி, கூத்து, கடத்தல், வன்முறை, கற்பழிப்பு என குற்றம் புரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணமே பெற்றோரின் நெறுக்கம் குன்றிய, அரவணைப்பற்ற வளர்ப்புதானாம்.

சின்னஞ்சிறு குழந்தைகளைக் கட்டுப்பாட்டுடன், நேர்வழியில் நடத்தும் பொறுப்பிலிருந்து விலகி, அரசியல், பொதுநலத் தொண்டுகள் போன்ற பொதுவாழ்வில் தீவிரமாகப் பெண்கள் ஈடுபடும்போது மேற்கண்ட அவலங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதற்காக பெண்கள் பொதுவாழ்வில், அரசியலில், பொருளீட்டும் வேலைகளில் பற்கேற்கக் கூடாது என்று பொருளல்ல.

குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிர்பந்தம், வாய்ப்பு வசதிகளைப் பொறுத்து வேலைக்குப் போக வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். குழந்தைகளே இல்லாத பெண்கள், குடும்பப் பொறுப்பு குறைந்த நடுவயதைத் தாண்டிய பெண்கள் அல்லது தங்கள் பிள்ளைகளை நல்லவிதமாக வளர்க்கக்கூடிய மாமியார், தாயார், பாட்டி போன்ற வீட்டுப் பெரியவர்கள் நிறைந்த கூட்டுக் குடும்பப் பெண்கள் அல்லது வீட்டுப் பொறுப்புகளையும், வெளிவேளைகளையும் திறமையாக செய்து முடிக்கக்கூடிய அசாதரணமான சாமர்த்தியம் பெற்ற பெண்கள், பெண் மருத்துவர்கள், நர்ஸ்கள், ஆசிரியைகள் விதிவிலக்காக இருக்கலாம்.

இவர்களும் கூட, தங்கள் குழந்தைகள் விபரம் புரிந்து வளரும் வரை கூடவேயிருந்து கவனித்து வளர்ப்பதில் அக்கறையெடுப்பது முக்கியம். தாய்-சேய் இருவருக்குமே இந்த ஆரம்ப கால பிணைப்பு ஆரோக்கியமான Levitra online மனப்பாங்கை வளர்ப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிரபல ஆங்கில பெண்கள் இதழ் ஒன்றில் திருமணமா? வேலையா? (Marriage or Career?) எனும் தலைப்பில் பலவருடங்களுக்கு முன் வந்த கட்டுரையொன்று ஞாபகத்துக்கு வருகிறது. பொழுது போக்காகவும், சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வேலைக்கு விரும்பிச் செல்லும் பெண்கள் பலருக்கு திருமணமானதும் அந்த வாய்ப்பு இல்லாமல் போவது ஒரு ரகம். குடும்பத்தலைவியாக (House Wife) மட்டுமேயிருக்க விரும்பும் பல பெண்களுக்கு புகுந்த வீட்டு நிதி நிலைமை, பொருளாதார நெறுக்கடி, கணவனின் வற்புறுத்தல் காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இன்னொரு ரகம்.

இந்த இரண்டாவது வகைப் பெண்கள் வீட்டுவேலை, வெளிவேலை என்று இரண்டையுமே சுமந்து கொண்டிருக்கும்போது இரண்டிலும் கவனமின்றி அரை குறையாகச் செயலாற்றி இரண்டு இடங்களிலும் பேச்சு வாங்குவதை அன்றாடம் பார்க்கிறோம்.

வேறு சில பெண்கள் இயற்கையிலேயே சாதனைப் புரியப் பிறந்தவர்களாக இருப்பார்கள். சரவதேச அளவில் இப்படி சாதனைப் புரிந்த பெண்களில் பலரும் திருமணமாகாமலேயே இருப்பதைப் பார்க்கலாம். அப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்கள் ஆரம்பத்திலேயே விவாகரத்து பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் முன்னேற்றத்துக்கு குடும்பமும், குழந்தைகளும் இடைஞ்சலாக இருக்கலாம் என்று ஆரம்ப காலத்தில் எடுத்த முன்யோசனைதானாம்!

திருமணமான, குழந்தைகள் குடும்பம் என்ற பல பொறுப்புகள் உள்ள பெண்களில் சிலர் அத்திப்பூத்தார்ப்போல் பிரகாசிப்பதையும் ஆங்காங்கு நாம் பார்க்காமல் இல்லை. சற்று நெருங்கி ஆராய்ந்தால், அவளுடைய குடும்பத்துப் பெரியவர்களும், கணவரும், பிள்ளைகளுமே அவள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாயிருப்பது தெரிய வரும்.

தமிழக அரசு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சிறப்பு ஆணையர் திருமதி, ஷீலாராணி சுங்கத் ஒரு கூட்டத்தில் பேசியபோது, ‘ஆண்களின் ஒத்துழைப்பும், ஊக்குவிப்பும் இல்லாமல் பெண்கள் முன்னேற முடியாது’ என்று ஆணித்தரமாகப் பேசியுள்ளது சிந்தனைக்குரியது. இதுமட்டுமின்றி, திருமணம் செய்து கொண்ட பிறகு ஆண் அதிக பலம் பெறுகிறான். அதே சமயம் பெண்ணின் சக்தி பாதியாகக் குறைந்து போகிறது. இது இயற்கை நியதி. பெண்களின் உயர்வுக்கும், மேம்பாட்டுக்கும் ஆண்களின் உதவியும், ஒத்தாசையும் தேவைப்படுகிறது எனும் பொருள்பட பேசியிருக்கிறார்.

ஆணின் சுயநலத்தாலும், பொருள்தேடும் பேராசையாலும் வீட்டை விட்டு வெளியேறி வேலை பார்க்கிற உயர்மட்ட பெண்கள் பலர், ‘ஆணும் பெண்ணும் சர சமமே! பட்டப்படிப்பெல்லாம் வீட்டோடு முடங்கிக் கிடக்கவா? யார் என்ன சொன்னாலும் வேலைக்குப் போயே தீருவேன்’ என்று கிளம்புகிற பெண்கள் சிலர்.

காலங்காலமாக பெண்கள் படிக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருந்த நம் முன்னோர்களும், மார்க்க மேதைகளும் இல்லத்தரசி எனும் பெரும் அந்தஸ்தை பெண்களுக்குத் தந்து அதையே ஊக்குவித்தும் வந்திருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த திரு. ரங்கநாத் மிஸ்ரா, ‘ஆணுடன் சமத்துவம் கோரும் முறையீட்டால் தான் பெண்ணின் அந்தஸ்து இன்று தாழ்ந்து போயிருக்கிறது. அவர்களின் இந்த நிலைக்கு நாம் தான் காரணம். குடும்பத்தில் பெண்களின் உண்மையான பங்கையும், அவர்களுக்குத் தரவேண்டிய அந்தஸ்தையும் சரிவரப் புரிந்து செயல் படுத்துவதில் நாம் எங்கோ தவறிவிட்டோம். அதுவே இன்றைய சமூகத்தில் காணும் வன்முறைகளுக்கும், மற்ற அனாச்சாரங்களுக்கும் அடிப்படை’ எனும் பொருள்பட பேசியுள்ளார்.

வரலாற்று அடிப்படையிலும், மனோதத்துவ அடிப்படையிலும் கவனித்தால், சோவியத் ரஷ்யாவின் மாஜித்தலைவர் கோபர்சேவின் மனைவி, பரத்பூர் மஹாராணி திருமதி. திவ்யாசிங் போன்ற தலைசிறந்த பெண்மணிகள், ‘சமூகத்தின் பொக்கிஷமான, பாதுகாக்கப்பட வேண்டிய பெண்களை அரசும், சமூகமும் எப்படியெல்லாம் சுயநல நோக்கோடு வீட்டை விட்டு வெளியேற வைத்து அந்த இனத்துக்குப் பாதகம் இழைத்துவிட்டது’ என்பதை அழகாக விலாவாரியாக சொல்லியிருப்பதில் உள்ள உண்மையைப் புரியலாம். இப்படி இந்த நூற்றாண்டின் சமூக விற்பன்னர்களும், மேதைகளும் பேசும் இந்தக் கருத்துக்கள் யாவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் இனங்கண்டு எச்சரித்ததும், என்றைக்குமே பொருந்தக் கூடியதுமான சீர்த்திருத்தக் கருத்துகள்தான்.

பெண்களுக்கான படிப்பு, பயிற்சி என்று எல்லாமே ‘ஆண்-பெண் நெருக்கம் எவ்வளவு ஆபத்தானது’ என்பதை வலியுறுத்துவதை – இவை எல்லாமே பெண்கள் முன்னேற்றத்துக்கு விரோதமானது, தனிமனித உரிமைக்குப் புறம்பானது என்று அனுமானித்து, பெண்களின் நல்வாழ்வில் தங்களை அர்ப்பணித்துச் செயல்படும் மாதர் சங்கங்கள், அமைப்புகள் விமர்சித்துப் பேசுவதில் அர்த்தமில்லை. சிந்திக்க வேண்டிய இந்த கருத்துகளை பிற்போக்குவாதிகளின் கூக்குரல் என்று ஒதுக்கி விடாமல் சமூகம் பெருமைப்படும் நல்லதொரு செயல்முறைத்திட்டத்தை வகுத்துத் தந்து வழிகாட்ட ஆவன செய்ய வேண்டும் இந்த அமைப்புகள்.

Add Comment