அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்திய பிரம்மாண்டமான தமிழர் திருவிழா 2011!!!

28/01/2011 வெள்ளிக்கிழமை நண்பகல் புழுதி மற்றும் குளிர்புயல் புரட்டி வீசிச்சென்ற சில மணி நேரத்தில் அல் கிஸைஸ் பெண்கள் Buy cheap Bactrim கல்லூரியில் மீண்டும் ஓர் புயல் வீசத் தொடங்கியது.

அமீரகத் தமிழர்கள் அமைப்பு பெருமையுடன் கொண்டாடிய தமிழர் திருவிழா மாலை ஜந்து மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் புழுதி மற்றும் குளிர் புயல் வீசியமையால் தமிழ் மக்கள் சற்றுக் காலத்தாமதமாக வந்து சேர்ந்தனர். அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில் விழாவை சரியாக 6.10க்கு தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து செல்வி நிவேதிதா ஆனந்தன், அமீரக தேசியகீதம் செல்வி. பிரித்திகா அன்பழகன் பாட விழா களை கட்ட தொடங்கியது. அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சிறப்பு பாடல் ஒலிப்பரப்புடன், செல்வி நிவேதிதா மற்றும் குழந்தைகள் குழுவினரின் செம்மொழிப் பாடல் நடனம் மிக நேர்த்தியாக நடந்தது. மக்களின் கரவோசை அடங்க சில நிமிடங்களாகியது.

அதனை தொடர்ந்து தாயகத்திலிருந்து வந்திருந்த நடிகை மற்றும் தொகுப்பாளினி செல்வி. நீலிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மேடையேற இளைய சமுதாயத்தின் கரவோசை அரங்கை அதிர வைத்தது.

தொடர்ந்து மேடையை ராஸ் மீடியா நடனக் குழுவினர் பிடித்துக் கொண்டு நடனப்புயலை வீசத் தொடங்கினர். வந்திருந்தவர்கள் கைத்தட்டி உற்சாகம் செய்ய மேலும் அவர்களின் ஆட்டம் அரங்கை புரட்டிபோட்டது. எமிட்டா குழுவினரின் சிலம்பாட்டம், வாள் சண்டை என்று ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப் படுத்தி கொண்டே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று செல்ல அதனை தொடர்ந்து ஸ்ரீவித்யா கீபோர்டு இசைக்க அரங்கம் அதிரும் வண்ணம் ரசிகர்களின் ஆதரவு, இசைக்கேட்டு, பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு செவிக்கு உணவளிக்க சிறப்பு விருந்தினர்கள் மேடையேற அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் திரு.அமுதரசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்க ஆவணம் செய்த பாரத பிரதமர் மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் அமைப்பு தாயகத்தில் செய்துவரும் மார்பக & கர்ப்ப புற்றுநோய் முகாம்கள் குறித்தும் பேசினார்.

தொடர்ந்து விழா மேடையிலே நம் சிறப்பு விருந்தினர்கள். முனைவர். பர்வீன் சுல்தானா, வழக்குரைஞர் சுமதி, மைனா திரைப்பட நடிகை அமலா பால், சுபஸ்ரீ தணிகாசலம் மற்றும் ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. நூர்தீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். திரு.அமுதரசன் அவர்கள் வரவேற்புரையிலே அமீரகத் தமிழர்கள் அமைப்பின் மகளிர் அணியை அறிமுகம் செய்து வைத்தார்.

வழக்குரைஞர் திருமதி. சுமதி தமக்கே உரிய பாணியில் தமிழ் உணர்வுடன் மழைச்சாரலாய் பேசிச்சென்றார். பின்னர் வந்த முனைவர். பர்வீன் சுல்தானா பேச தொடங்கும் முன்னே ரசிகர்கள் கைத்தட்டி ஆரவரம் செய்ய பின் பேசத் தொடங்கிய முனைவர் இடிமுழக்க புயலாக மாறி ஆழமான கருத்துகளை ஆழ்மனதில் பதியவைத்தது மட்டுமல்லாது அரங்கம் அதிரும் வண்ணம் பேசி அமர்ந்தார். பின்னர் வந்த ஜெயா டி.வி. சுபஸ்ரீ தணிகாசலம் சில கருத்துகளை தெரிவித்துவிட்டு, அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார். அமீரகத் தமிழர்கள் அமைப்புடன் இணைந்து நடத்தப்போகும் ஹரியுடன் நான் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டுச் சென்றார். ஈ.டி.ஏ. மெல்கோ இயக்குனர் அஹமது மீரான் மற்றும் நூர் அல் தீன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. நூர்தீன் ஆகியோர் அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்கள் . அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மைனா திரைப்பட நாயகி அமலா பால் பேச அழைக்க அரங்கில் குழுமியிருந்தவர்கள் கைத்தட்டி அரங்கை அதிரவைத்தனர். சில நிமிடங்கள் தமிழில் உரையாடிய அமலா பால், ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்க மேடையில் நடனம் ஆடினார். இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போய் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து சென்றார். ரசிகர்கள் கூட்டத்திலிருந்து மைனா மைனா என குரல் வந்த வண்ணம் இருந்தது.

பின்னர் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்து மகளிர் பிரிவு செயலாளர் திருமதி. அமிர்தா எடுத்துரைத்து மகளிர் பிரிவு நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார்.

அமீரகத்தில் முதன்முறையாக திரு. ஆடுதுறை அழகு. பன்னீர் செல்வம் அவர்களின் பாட்டு மன்றம் களைக் கட்டியது. நடுவரின் நகைச்சுவையான பேச்சு குழுமியிருந்தவர்களை கவர்ந்திழுக்க மக்கள் இன்னும் பேசமாட்டாரா என்னும் அளவுக்கு மிக அருமையான ஓர் நிகழ்வை அமீரக வாழ் தமிழர்களுக்காக அய்யாவும், குழுவினரும் கொடுத்து சென்றனர். நள்ளிரவு கடந்தும் அரங்கம் நிறைந்த நிகழ்ச்சி என்ற பெருமையை அமீரகத் தமிழர்கள் அமைப்பு தட்டிச்சென்றது. தாயகத்திலிருந்து வந்திருந்த இராஜபாளையம் சொக்கனாதன்புதூர் அய்யா. திரு. கனகராஜ் அவர்கள் கடைசிவரை ரசிகனாகவே அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். குழந்தைகளுடன் குழுமியிருந்த மக்கள் நள்ளிரவையும் பெரிதுப்படுத்தாமல் அமர்ந்திருந்ததே அவர்கள் எமிட்டாவிற்கு அளித்த மிகப்பெரிய சான்று. குலுக்கல் முறையில் பிரிண்டர், டி.வி.டி. பிளேயர், மொபைல் போன், 32″ சாம்சங் டி.வி. வழங்கப்பெற்று நிகழ்ச்சி நள்ளிரவு 12.40மணிக்கு மகளிர் அணி செயலாளர் திருமதி. அமிர்தா அவர்களின் நன்றியுடன் முடிவடைந்தது. 1000க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆடுதுறை அழகு.பன்னீர்செல்வம் அய்யா குழுவினர் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு பொன்னாடைப்போர்த்தி சிறப்புசெய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணைச்செயலாளர் திரு.முஸ்தாக், பொருளாலர் திரு. நயீம், இணை பொருளாலர். லஷ்மி நாராயணன் , கலைச்செயலாளர். திரு. சிம்மபாரதி, ஒருங்கிணைப்பாளர். திரு. சலீம், நிறுவன உறுப்பினர். திரு. அன்பழகன் மற்றும் உறுப்பினர்கள் முகவை ராஜா, மதுக்கூர். ரூமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். ஒலி,ஒளி அமைப்பை கீழை.ராஸாகான் மிகச்சிறப்பாக செய்திருந்தார். விழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

Add Comment