கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகாரால் பரபரப்பு

வீட்டு வரி தீர்வை நிர்ணயத்திற்காக கமிஷன் கொடுத்தால் பணிகள் நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் புகார் கூறப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது.கடையநல்லூர் நகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் தலைவர் காளிராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் அப்துல் லத்தீப், இளநிலை அகமதுஅலி, சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொணடனர்.கூட்டம் துவங்கியவுடன் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள காளிராஜூக்கு கமிஷனர் அப்துல் லத்தீப் உறுதிமொழி வாசிக்க அதற்கான பிரமாணம் எடுத்து கொண்டார். தொடர்ந்து நகராட்சி தலைவராக இருந்த இப்ராகிம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-சாகுல்ஹமீது : எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை. கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை.

பேட்டை பகுதியில் கடுமையான குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.பாதுஷா : கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வீட்டுவரி தீர்வை நிர்ணயம் செய்யப்படுவதற்காக கமிஷன் கொடுத்தால் தான் வரி குறைக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது.கமிஷனர் : 533 வீடுகளுக்கு வீட்டுவரி அதிகம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அதற்கான வரி குறைப்பதற்கு நகராட்சி நிர்வாக ஆணையர் மூலம் ஆய்வு செய்து வரி Buy cheap Ampicillin குறைக்கப்பட்டு வருகிறது. சில வீடுகள் விடுபட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. விடுபட்ட வீடுகளை மீண்டும் ஆராய்ந்து அப்பீல் கமிட்டியிடம் மனு கொடுக்கப்பட்டு அதன்மூலம் வரி குறைக்க ஏற்பாடு செய்யப்படும்.சாகுல்ஹமீது : நிறைய வீடுகள் வரி விதிப்பில் குறைப்பதாக தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளதே?கமிஷனர் : அதற்காக தான் மீண்டும் வரி விதிப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

பாதுஷா : வீட்டுவரி நிர்ணயத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட வேண்டுமென கூறுவதாக பொதுமக்கள் புலம்புகிறார்களே?கமிஷனர் : எழுத்து பூர்வமாக தெரிவியுங்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கலாம்.பாலசுப்பிரமணியன் : நகராட்சி நிர்வாகத்திற்கு குடிநீர் மற்றும் சொத்துவரி மூலமாக தான் வருமானம் கிடைக்கிறது. ஆனால் நகராட்சி பொது நிதியில் இருந்து தேவையில்லாத வகையில் பணம் செலவழிக்கப்படுகிறது. சம்பளம் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு மட்டும் பொதுநிதியை பயன்படுத்தலாம்.
கமிஷனர் : நகராட்சி நிதியிலிருந்து அன்றாட செலவு திட்ட பணிகள் அதற்கான மதிப்பீடு தொகை உள்ளிட்டவைகளுக்கு தான் செலவிடப்படுகிறது. இருந்தபோதிலும் கவுன்சிலர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Add Comment