கடையநல்லூரில் தொடர் மின்தடை எதிரொலி: பள்ளி மாணவர்கள் கடும் அவதி…

556855_757217517638286_1175859608_n

Buy Viagra Online No Prescription justify;”>கடையநல்லூரில் தொடர் மின்தடை எதிரொலி: பள்ளி மாணவர்கள் கடும் அவதி…

கடையநல்லூர் பகுதியில் இரவும், பகலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை தவிர பரவலாக பல மாவட்டங்களின் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. கடையநல்லூர் பகுதியில் மதியம் 2 மணி நேரம், இரவு ஒரு மணி நேரம் என அடிக்கடி தினமும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பகலில் பெண்கள் மிக்சி, கிரைண்டர் இயக்கவும், சமையல் செய்யவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இரவில் மின்தடை ஏற்படுவதால் மாணவ, மாணவிகள் பாடம் படிக்கவும், வீட்டுபாடம் எழுதவும் திணறுகின்றனர். மழை நேரங்களில் கொசுக்கடி அதிக இருப்பதால் மின்தடை நேரங்களில் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Add Comment