உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவச சைக்கிள்-தமிழக அரசு முடிவு!

தமிழக அரசு சார்பாக, கோயில் பூசாரிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதையொட்டி, பள்ளிவாசலில் பணிபுரியும் இமாம் மற்றும் மோதினார்களுக்கு இதுபோன்று இலவச சைக்கிள் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம்களால் வைக்கப்பட்டது. அதை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்,

”தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில் பணிபுரியும் மோதினார்களுக்கும், தமிழக கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டதை போல இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்று உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில், உலமாக்களின் ஜீவாதார கோரிக்கைகளை நலவாரியம் மூலம் நிறைவேற்றிட buy Cialis online முதல்வர் கவனம் செலுத்தவேண்டும்.

Add Comment