எதார்த்தமான உயர்திணை ….நான்

எதார்த்தமான உயர்திணை ….நான்

” பெட்ரோல் விலை.,
ஏறினாலும்
வாகன நெருக்கடியில்….
பயணிக்கும் …கூட்டம்
இருக்கத் Viagra online தான்
செய்கிறது……

தங்கம் விலை.,
ஏறினாலும்…
‘அட்சய திருதி’ நாட்களில்
வரிசையில் நின்று
வாங்கும்….கூட்டம்
இருக்கத் தான்
செய்கிறது……

வீட்டில் டிவி ..
இருந்தாலும்…
இலவசமாய் இன்னொன்று
என்றால்….
இளித்துக் கொண்டு
வாங்கும்….கூட்டம்
இருக்கத் தான்
செய்கிறது…

கல்வி கட்டணம்
அதிகம் ஏறினாலும்
ஆங்கிலப் பள்ளியில்
படிக்க வைத்தால்
தான் பெருமையென்று
நினைக்கும்….கூட்டம்
இருக்கத் தான்
செய்கிறது…

பேருந்துகளில்..
அரை டிக்கெட்டுக்காக ..
குழந்தையின் உயரத்தை …
குறைத்துக்
காட்டும்….கூட்டம்
இருக்கத் தான்
செய்கிறது…

அதிகம் படித்தாலும்
வரதட்சணை பேரங்களில்
ஊமையாகி போகும் …
ஆண்கள்….கூட்டம்
இருக்கத் தான்
செய்கிறது…

இது போன்ற …
எதார்த்தமான ..
கூட்ட வரிசைகளில்….
கைகட்டி நிற்கும் …
எதார்த்தமான …
உயர்திணை ….
….நான் ……
–சு.அப்துல் ஹக்கீம் ..,திருநெல்வேலி ….

Add Comment