டாக்டர் போல் நடித்து தனியார் மருத்துவமனைகளில் 2 பெண்களிடம் 15 பவுன் நகை அபேஸ்!

திருச்சியில் டாக்டர் போல் நடித்து தனியார் மருத்துவமனைகளில் 2 பெண்களிடம் 15 பவுன் செயின் பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). டெய்லர். இவரது மனைவி சத்யபிரியா (28). இவரை பிரசவத்துக்காக கடந்த 13ம் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் மருத்துவமனையின் 3வது மாடியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 10.55 மணிக்கு சத்யபிரியாவை பரிசோதிப்பதற்காக டாக் டர் வந்தார். அப்போது அந்த அறையில் சத்யபிரியா வின் தாய் சொர்ணம், உற வினர் சிவபிரகாசம் ஆகி யோர் இருந்தனர். அனைவரையும் வெளியே அனுப்பிய டாக்டர், ஊசி போடுவதற் காக கழுத்தை திருப்புமாறு சத்யபிரியாவிடம் கூறினார். அப்போது சத்யபிரியாவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி செயினை கழற்றி வாங்கி கொண்ட, டாக்டர் ஊசி போடுவது போல் நடித்தார். பின்னர் ஊசி போட்டாகிவிட்டது, என கூறிய டாக்டர், இப்போது கழுத்தை திருப்ப வேண் டாம் என்று கூறி வெளியே சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி பார்த்த சத்யபிரியா, டாக்டர் செயினை திருப்பி தராமல் போனதால் தாயிடம், டாக்டர் செயி னேடு செல்கிறார் என கூறி னார். இதையடுத்து சிவபிரகாசம் அவரை தேடி சென்ற போது டாக்டர் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:

Buy Ampicillin Online No Prescription justify;”>திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்த முருகேசன் மனைவி ஈஸ்வரி (33). சுகாதார செவிலியர். முதுகு தண்டு வட சிகிச்சைக்காக ஈஸ்வரி தென்னூர் உழவர் சந்தை, பட்டாபிராமன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று காலை அவருக்கு ஊசி போட வேண்டும் என கூறிய டாக்டர் ஒருவர், அறை கதவை சாற்றிவிட்டு ஊசி போட சென்றார். கழு த்தில் ஊசி போட வேண்டும் என கூறிய அவர், ஈஸ்வரி அணிந்திருந்த 7 பவுன் செயினை கழற்றி வாங்கி கொண்டார். பின்னர் ஊசி போட்டது போல் நடித்து, கழுத்தை 10 நிமிடம் திருப்ப வேண்டாம் என கூறி அங்கிருந்த மாயமானார்.

இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததையடுத்து 2 மருத்துவமனைகளிலும் பதிவான வீடியோ காட்சி களை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Comment