கடையநல்லூர் புரோட்ட மாஸ்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது

DSC_0387

கடையநல்லூரில் புரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் மூன்றுபேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மைதீன் மகன் ரகுமத்துல்லா (36). இவர் அங்குள்ள புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ரகுமத்துல்லா கடையநல்லூர் மின்வாரியம் அலுவலகம் அருகே பன்னார்குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ரகுமத்துல்லா மனைவி அலிபாத்துவிற்கும், மேலக்கடையநல்லூரை சேர்ந்த பால்சாமி என்பவருக்கும் ரகசிய உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ரகுமத்துல்லா அலிபாத்துவை கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த Buy Cialis கடையநல்லூர் பால்சாமி (21) மற்றும் மாவடிக்கால் பகுதியை சேர்ந்த சுரேஷ் (24), மேலக்கடையநல்லூர் கண்ணன் (24) ஆகிய மூவரும் சேர்ந்து ரகுமத்துல்லாவை அடித்து கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூவரையும் இன்ஸ்பெக்டர் சபாபதி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Add Comment