தடுமாறும் தாம்பத்யம்! அதிகரிக்கும் கள்ளக்காதல் கொலைகள்!!

தமிழகத்தில் 2008-10-ம் ஆண்டில் மட்டும் 890 கள்ளக்காதல் கொலைகள் நடந்தேறியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. கள்ளக்காதல் கொலைகளைத் தொடர்ந்து, “செக்ஸ்’ கொலைகளும் அதிகரித்துள்ளன.

கொலை எதற்காக நடந்தது என்று பிரித்துப் பார்க்க முடியாத நிலையில், கள்ளக்காதலும், “செக்ஸ்’ கொலைகளும் ஒன்றுக் கொன்று பிணைந்துள்ளன.

இந்த வகையில், 2007ல் 123 கொலைகளும், 2008ல் 155 கொலைகளும், 2009ல் 217 கொலைகளும், 2010 ஜூலை வரை 195 கொலைகளும் பதிவாகியுள்ளன. தற்போது இது 200ஐ தாண்டியிருக்கும் என தெரிகிறது.

கள்ளக்காதல் கொலைகள்

இத்தகைய கொலைகளின் எண்ணிக்கை இந்தாண்டு, சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளது. சாமியாருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் கணவனைக் கொன்று அந்த கொலையை கண்டுபிடித்த மகனை கொலை செய்துள்ளார் ஒரு பெண். இது போதாது என்று மகளையும் கொன்று புதைத்துவிட்டு கடைசியில் கைதாகி சிறைக்குப் போயுள்ளார் திருவானைக்காவலைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்.

மதுரவாயல் வித்யா

காதலித்து திருமணம் செய்து கொண்ட வித்யா, 6 வயது மகளையும், கட்டிய கணவனை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் ஏற்பட்ட தொடர்பினால் தனது கணவனையே கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளார். இப்போது இவருக்கும் சிறைக்குப் போயுள்ளார்.

சென்னை நிர்மலா

சென்னை டி.பி.சத்திரம் வ.ஊ.சி. நகரைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் ஏழுமலை (வயது 45). இவரது மனைவி நிர்மலா, ஆட்டோ டிரைவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கூலிப்படையை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு மாரடைப்பினால் இறந்து போனதாக நாடகமாடியுள்ளார். உண்மையை கண்டறிந்த போலீஸ் இப்போது நிர்மலாவை உள்ளே தள்ளியுள்ளது.

பண்ருட்டி கல்பனா

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த சீனிவாசனுக்கும் (27) கடலூர் மாவட்டம் பண்ருட்டி கொக்குபாளையம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த சந்திரசேகர் செட்டியார் மகள் கல்பனாவுக்கும் 31-05-2012 அன்று திருமணம் நடந்தது. திருமண நாளை 31-05-2013 கொண்டாட தம்பதியினர் பண்ருட்டி வந்தனர். அங்கு சிலர் இடைமறித்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொன்றனர். கணவரை கொன்று விட்டு எனது நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என கல்பனா போலீசில் புகார் செய்திருந்தார். ஆனால் கள்ளக்காதல் காரணமாகத்தான் கல்பனாவே கொலை செய்ய சொன்னதை போலீசார் கண்டறிந்தனர்.

பெண்களும் ஏமாற்றுகின்றனர்

ஆண்கள்தான் ஒன்றுக்கு இரண்டு திருமணங்களை செய்துவிட்டு பெண்களை ஏமாற்றி வந்தனர். இப்போது பெண்களும் கணவனை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் தொடர்கின்றன. இது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியவரும்போது, பெண்கள் கொலை செய்யத் துணிகின்றனர்.

பாதிக்கும் குடும்ப உறவுகள்

திருமணம் ஆன பெண், திருமணம் ஆன ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கின்றனர். இதனால் இல்லற வாழ்க்கை சீரழிகிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆண்-பெண் கெடுவது மட்டுமல்லாது, அவர்களின் குடும்பங்கள் கெடுகின்றன அதாவது பாதிக்கப்படுகின்றன. கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் தவிர அவர்களது மனைவி-கணவன், அவர்களது குழந்தைகள், உறவினர், பெற்றோர் என அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

செக்ஸ்தான் காரணமா?

எதனால் இந்தக் கள்ள உறவுகள் ஏற்படுகிறது என்று பார்த்தால் 99% செக்ஸ் என்கிற காரணத்திற்காக மட்டுமே என்கின்றனர் உளவியல் நிபுணர்க்கள். இராப்பகலா தன் மனைவிக்காக தன் கணவனுக்காக தங்கள் குடும்பத்திற்காக என்று உழைத்துக் கொண்டிருக்கும் கணவனோ மனைவியோ அளவுக்கதிகமான பணிச்சுமைகளில் இருந்து அவர்களுக்கு அதிகப்பட்ச ஓய்வு தரும் உடலுறவினை முழுமையாக வைத்துக் கொள்ள முடியவில்லை. இதுவே தாம்பத்யம் தடுமாற காரணமாகிறது.

மனஇறுக்கத்தால் சிக்கல்

பணிச்சுமையால் இருவருக்கும் ஏற்படும் மன இறுக்கம், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதது, துணையின் தேவையை பூர்த்தி செய்ய மறுத்தல் போன்றவை தற்போதைய கள்ளக்காதல், தற்கொலை மற்றும் Buy Ampicillin Online No Prescription விவாகரத்து வழக்குகளுக்கு அடிப்படையாக உள்ளன. சில நேரங்களில் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிய வரும்போது, சிலர் நாசுக்காக பிரிந்து விடுகின்றனர். சிலர் கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர்.

புரிந்து கொள்ளுங்கள்

பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்று கருதாமல், வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு செல்வது எப்படி என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, மனம் விட்டுப் பேசி, ஒருமித்த வாழ்க்கை வாழ முற்படுவதே நல்லது.

தாம்பயத்தில் கணவனுக்கு என்ன வேண்டும் என்று மனைவியும் மனைவிக்கு என்ன வேண்டும் என்று கணவனும் பேசி புரிந்துகொண்டு தாம்பத்யத்தில் முழுவதுமாக ஈடுபட்டால், கள்ள உறவுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

Thanks:oneindia.in

Add Comment