தொடரை வென்றது பாக்.,: நியூசி., பரிதாபம்

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் தொடரை இழந்த நியூசிலாந்து அணி பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என முன்னிலை வகித்தது. நேற்று ஐந்தாவது போட்டி ஹாமில்டனில் நடந்தது. “டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் ரோஸ் டெய்லர், “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
ஷேக்சாத் சதம்:
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹபீஸ் (14) சுமாரான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த கம்ரான் அக்மல் (17), யூனிஸ் கான் (21) பெரிய அளவில் சாதிக்கவில்லை. மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அகமது ஷேக்சாத், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர் 109 பந்தில் 115 ரன்கள் (3 சிக்சர், 12 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த மிஸ்பா (25), உமர் அக்மல் (32), கேப்டன் அப்ரிதி (24) ஓரளவு கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 268 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் மில்ஸ், ஜேக்கப் ஓரம், ஸ்டைரிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
டெய்லர் ஆறுதல்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு, ஜெசி ரைடர் (0) மோசமான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த ஜெமி ஹவ் (12) நிலைக்கவில்லை. பின்னர் இணைந்த மார்டின் கப்டில் (65), ரோஸ் டெய்லர் (69) Buy Levitra ஜோடி ஆறுதல் அளித்தது. பிரண்டன் மெக்கலம் (9), ஸ்டைரிஸ் (9) உள்ளிட்டோர் ஏமாற்ற, நியூசிலாந்து அணி 46.5 ஓவரில் 227 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் சார்பில் வாகாப் ரியாஸ் 3, உமர் குல், அப்ரிதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பாகிஸ்தான் வீரர் அகமது ஷேக்சாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆறாவது மற்றும் கடைசி போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது.
17 ஆண்டுகளுக்கு பின்…
இதன்மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது. முன்னதாக கடந்த 1994ல் நியூசிலாந்து சென்ற சலீம் மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது. கடந்த 1995ல் நியூசிலாந்து சென்ற வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 2-2 என ஒருநாள் தொடரை சமன் செய்தது.

Add Comment