கடையநல்லூரில் சீரான குடிநீர் கேட்டு கமிஷனர் அறையில் தரையில் அமர்ந்து தர்ணா

கடையநல்லூர் நகராட்சியில் நேற்று குடிநீர் சீராக கிடைக்க வேண்டுமென நகராட்சி கமிஷனர் அறையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடந்தது. லேப்டாப் ஆதாரத்தை காண்பித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி 13வது வார்டு அல்லிமூப்பன் தெருவை சேர்ந்த பிலால் மஸ்ஜித் தொழுகை பள்ளிக்கு கிழக்கே டிரான்ஸ்பார்ம் அருகில் அமைந்திருக்கும் பெண்கள் தொழுகை பள்ளி வரையிலான குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் குடிநீர் வினியோகத்திற்காக நகராட்சியில் முதன் முதலில் குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு அதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது முதல் சீரான குடிநீர் இப்பகுதி மக்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என பலமுறை நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு Bactrim No Prescription புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தும் மேலும் புதிய குடிநீர் இணைப்புகளை அதிகரித்தும் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஏற்கனவே குடிநீர் வராமல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இப்பகுதி மக்கள் கூடுதலான வகையில் ஒருகுடம் தண்ணீர் கூட கிடைக்கப்பெறாமல் சிரமப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.

இதனிடையில் கடந்த வாரம் இப்பிரச்னை தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டபோது கடந்த 31ம் தேதி முதல் 3 நாட்கள் குடிநீர் பராமரிப்பு பணி நடப்பதால் அத்தகைய நேரத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு குடிநீர் கிடைப்பதற்கான பணிகள் நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தும், குடிநீர் வினியோகம் சீராக வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நகராட்சி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டனர்.

நெல்லைக்கு நிர்வாகம் சம்பந்தப்பட்ட கூட்டத்திற்காக கமிஷனர் மற்றும் இன்ஜினியர் சென்றுவிட்டதாக கூறப்பட்டதை அடுத்து நகராட்சி சுகாதார அலுவலர் கணேசமூர்த்தியிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். நகராட்சி கமிஷனர் அறையில் இதற்கான மனுக்கள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் கமிஷனர் அறைக்குள்ளேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்தையா, கோமதிபாண்டியன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதுதொடர்பாக குடிநீர் வரும் 15ம் தேதிக்குள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக நகராட்சி தலைவர் காளிராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் செல்போனில் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்ட தகவலும் போலீசாரால் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில் தொடர்ந்து பிரச்னை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வரும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவினை லேப்டாப்பில் கொண்டு வந்து அதிகாரியிடம் பொதுமக்கள் போட்டு காண்பித்தனர். லேப்டாப்பில் அதிகாரிகள் தெரிவித்த உறுதிமொழி பதிவு செய்யப்பட்டிருந்த காட்சியை பொதுமக்களும் பார்வையிட்டனர். இதனால் லேப்டாப் மூலம் காண்பிக்கப்பட்ட இந்த சம்பவம் கடையநல்லூர் நகராட்சியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Add Comment