குழந்தைகளை கொல்லும் உணவுகள்…தடைசெய்யுமா அரசாங்கம்-செங்கோட்டையன் கடையநல்லூர்

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு அருமையான பதிவை நமது  கடையநல்லூர்.org வாசகர்களுக்கு தந்திருக்கிறார் செங்கோட்டையன் அவர்கள்.
குழந்தைகளை கொல்லும்  உணவுகள்…தடைசெய்யுமா அரசாங்கம்!
மோசக்கார ஆட்சியாளர்கள் என்று சொன்னால் மட்டும் போதாது வேசக்கார ஆட்சியாளர்கள் என்றும் சொல்லலாம். நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்றுவதாய் ஆட்சிப் பொருப்பை ஏற்கும்போது பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் கட்சிகளின் வளர்ச்சிக்காகவும், தங்களின் வாரிசுகளின் வளர்ச்சிக்காகவும் நாட்டையும், நாட்டின் மக்களையும் எப்படியெல்லாம் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
மக்களாகிய நம்மை பொம்மலாட்டம் நடத்தும் நாடகக்காரனைப்போல் நம்மை எல்லாம் பொம்மைகளாக்கி ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாமெல்லாம் பொம்மைகளாய் ஓட்டுப் போட்டு விட்டு அட்டைப் பெட்டிகளில் அடைபட்டுக்கிடக்கிறோம் வெறும் பொம்மைகளாய்.
இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதுபோல் நாம் நம் நாட்டில் இருந்து கொண்டு அயல் நாடுகளைப் பற்றி அளவாடுகிறோம், பெருமையாடுகிறோம், ஆனால் நம் நாட்டைவிட மற்ற நாடுகள் ரெம்ப சிறப்பாக உள்ள நாடும் இருக்கிறது நம் நாட்டைவிட மோசமான நடுகளும் இருக்கத்தான் செய்கிறது.
ஒரு மாலாலாவை காப்பாற்றுவதாகவும், கண்ணியம் அளிப்பதாகவும் மார்தட்டிக்கொண்டு மாசற்ற குழந்தைகளை மாண்டொழிக்கும் அமெரிக்கா போல் அல்லாமலும், இரக்கமே இல்லாமல் இளம் பிஞ்சுகளை இரக்கமின்றி கொன்று தொலைக்கும் இஸ்ரேல் போல் இல்லாமலும், நாடே வரண்டு போனதால் நாவரண்டும் வயிற் வரண்டும் வாடி நாடித்துடிப்பு நின்று கொண்டிருக்கும் உகாண்டா, சோமாலியா நாட்டு மக்களைப்போல் இல்லாமலும்
குடிப்பதாலும் திண்பதாலும் மடிந்து போயிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பற்றி எந்த நாடாவது, அல்லது நாட்டை ஆளுகின்ற எந்த அரசுகளாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில் இருக்கிறதா? இல்லவே இல்லை!. எல்லா நாடுகளிலும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு எத்தனையோ அமைப்புக்கள் இருக்கின்றன என்றாலும், அந்த அமைப்புக்களும் அத்துனை நாடுகளிலும் உண்மையான அக்கறை கொண்டு மக்களை காப்பாற்றுகின்றனவா? என்பது கேள்விக்குறியான விசயமாகத்தான் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக குழந்தைகள் விசயத்தில் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சிக்காரர்களானாலும் சரி, அல்லது எந்த ஆட்சியாளாளர்களாக இருந்தாலும் சரி. அல்லது மனித நலம் காக்கும் எந்த அமைப்புகளானாலும் சரி. கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் திண்பண்டங்களில் கவனம் கொண்டுள்ளதா? என்று ஆராய்ந்து பார்த்தால் நிறையவே அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அறியக் கிடைக்கிறது. பெரியவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும் சரி, எல்லோரும் ஏதாகிலும் ஒரு விசயத்தில் கண்ணிருந்தும் குருடர்களாகவும், காதிருந்தும் செவிடர்களாகவும் வாயிருந்தும் ஊமையர்களாகவும் இருந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை.
அதிக மக்களால் நேசிக்கப்படும்  சிகரெட்டை எடுத்துக் கொள்வோம், சிகரெட் பிடித்தால் கெடுதி என்று தெரிந்தும் மக்களுக்கு அதை அரசாங்கம் அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது. காலம் காலமாக எத்தனையோ மருத்துவர்கள் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் கெடுதிகளை உறைக்க உதிர்த்த போதிலும் அதை புகைக்காத நாம், நமக்கேன் இந்த வம்பு என்று விலகிக் கொண்டதால் இன்று நம் குழந்தைகள் அதை சாதார்னமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் அவைகளை தயாரிக்கும் நிறுவனமும் அதனால் லாபம் பெறும் அரசாங்கமும்  தாங்கள் தப்பித்துகொள்ள வேண்டியும் ஏதோ மக்களுக்கு நன்மையை செய்வது போலவும் எச்சரிக்கை அறிவிப்புக்களை அதிலே வெளியிட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள்போல் காட்டிக்கொள்கின்றன
அரசாங்கத்திற்கு அதிகம் லாபம் ஈட்டித்தரும் மதுவை எடுத்துக் கொள்ளுங்கள், மது வகைகள் அதை உபயோகிப்பவர்களுக்கு மட்டுமின்றி அதனால் எத்தனையோ விளைவுகளை வீட்டில் உள்ளவர்களும், அண்டை வீட்டார்களும், பொதுமக்களும், அன்றாட நடக்கும் நடந்து கொண்டிருக்கும் விசயங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அரசாங்கமும் பண்முகமாக எத்தனையோ எதிர் விளைவுகளை எல்லா நிலைகளிலும் எதிர் கொண்ட போதிலும். மக்களுக்கு அதை அரசாங்கம் குடிப்பதற்கு அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்று நாட்டிலே நடந்து கொண்டிருக்கும் ஆயிரம் வழக்குகளில், தொள்ளாயிரம் வழக்குகள். மதுவால் ஏற்பட்டைவைகளே.. அவைகளிலிருந்து மக்களை காப்பாற்றுவதாக நினைத்து அப்பட்டமாக எத்தனையோ வகைப்பட்ட விளம்பரங்கள் அதற்காக.. பணத்தை அள்ளி இறைக்கும் அரசாங்கமும் அதை தயாரிக்கும் நிறுவனமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எந்த நிலையிலும் அரசாங்கத்திற்கு அனுவளவும் லாபமில்லாத நாட்டை சீரழிக்கக்கூடியது விபச்சாரம். அடிப்படையே அசிங்கமானது, மக்களுக்கு அதையும் அரசாங்கம் நடத்துவதற்கு அனுமதித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் ஏற்படும் அபாயகரமான நோய்களில் இருந்து காப்பாற்றுவதாய் நினைத்து ஆண்டுக்கு எத்தனையோ கோடி செலவில் வேண்டாம் என்றும், உரையணிந்து செய்யுங்கள் என்றும் அரசாங்கத்தின் தரப்பில் எத்தனையோ விளம்பரங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இவைதவிற குடிக்கும் தண்ணீரில் இருந்து பால் மற்றும் கலர் குடிபானங்கள்வரை, உண்ணும் உணவான அரிசி முதல் மைதா மாவு வரை, நவீனமாக விளைவிக்கும் காய்கறிகளில் இருந்து பிராய்லர் கோழிவரை, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். மக்களுக்கு பல தீங்குகளை விளைவித்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ பொருள்களைப்பற்றி.., என்னென்ன வற்றில் எத்தனை கெடுதல்கள் மக்களுக்கு ஏற்படும் என்பதை ஆதார்வப்பூர்வமாக தெரிந்திருந்தும் அத்தனையையும் மக்களுக்காக அரசாங்கம் அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது. இவைகள் பற்றி எல்லாம் விபரம் அறிந்த, தெரிந்த நாம் வாங்கி உண்டு அனுபவித்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். நம்மை விடுங்கள் நாமெல்லாம் தெரிந்தும் கிணற்றில் வாழும் தவளைகள்.
ஆனால், ஒன்றும் அறியாத.. தெரியாத சிறு பருவத்தில் உள்ள நம் பிள்ளைச் செல்வங்கள் பற்றி யார் அக்கறை கொள்வது? அரசாங்கமா? இல்லை, குழந்தைகள் நல அமைப்பா? இல்லை பெற்றோர்களா? இப்படி இதுவரை யாருமே குழந்தைகளின் திண்பண்டங்கள் விசயத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இரண்டு வயது முதல் ஏழு வயது குழந்தைகள் வரை குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் வகையில் வண்ணங்கள் தீட்டப்பட்டு ஆச்சிரியப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் சிறுவர்களின் சினாக்ஸ் எனப்படும் திண்பண்டங்களை யாராவது ஆராய்ந்ததுண்டா?  திண்பண்டங்களை உண்ட குழந்தைகள் வேதனைகளில் திண்டாட வைத்தும், நம்மை அளவிட முடியாத துயரத்தில் ஆழ்த்தும் குழந்தைகளின் திண் பண்டங்களை பற்றி நாம் யாரேனும் இந்த நிமிடம்வரை நினைத்துப் பார்த்ததுண்டா?
எத்தனையோ கோடிகள் செலவில் விளம்பரங்கள் செய்யப்படும் குழந்தைகளின்; ஊட்டச்சத்து விளம்பரங்கள், திண்பண்டம் விளம்பரங்கள், உடலுக்கு உபயோகப்படும் சோப், பவுடர், பேம்பர்ஸ், மட்டுமின்றி ஒர்க் என்றும், ஜம்க்கி, ஜிக்னா என்று அணியப்படும் உடைகளாலும் எத்தனை துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகி அல்லோலப்படுகிறார்கள் குழந்தைகள் என்பது அவைகளால் அனுபவிக்காத எத்தனை பேருக்கு தெரியும்?. தினம் தினம் எத்தனை குழந்தைகள் என்னென்ன காரணங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அலசுவோமானால் அத்தனை உண்மைகளும் வெளிவரத்துவங்கி விடும்.
அரசாங்க ஆஸ்பத்திரியிலோ அல்லது தனியார் மருத்துவ மனைகளிலோ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் பாதிக்குமேல் குழந்தைகள்தான். பெரியவர்களுக்கு உடல் நலக்குறைவு என்றால் அவர்களோடு போய்விடும். ஆனால் குழந்தைக்கு உடல் நலக்குறைவு என்றால் குடும்பமே குழந்தையின் பின்னாலே நிர்ப்பதை நாம் அன்றாட காணுகிறோம். அதில் அதிகமாக வரும் குழந்தைகளின் பிரச்சினை வயிற்றுவலி, வாய்புண், எதையாயாவது விழுங்கியது, கண்ணில் ஏதோ விழுந்தது, தோலில் பிரச்சினை, தலையில் முடி வளரவில்லை, இப்படி எல்லாமே குடிப்பதாலும், உண்பதாலும், உடையணிவதாலும் ஏற்படுகிற பிரச்சினைகள் ஆயிரமாயிரம்.
அழகு பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த ஒர்க் ஆடைகளில் கோர்க்கப் பட்டிருக்கும் இலகுவான சீடிகளால் உடையணியும் போதும், கழற்றும போதும் குழந்தைகளின் உடலில் கீரல் விழுகிறது. ஆடையின் முகப்பில் அழகுக்காக ஒட்டப்படும் கல் மற்றும் பிளாஸ்டிக் பட்டன்களை எழிதாக விழுங்கி அவதிப்படும் குழந்தைகள் அதிகம்.
Inline image 1Inline image 2Inline image 3
ஜமிக்கி, ஜிக்னா இவை குழந்தைகளின் ஆடைகளில் மட்டுமின்றி பெற்றோற்களின் சேலை ஜாக்கெட்களில் இருந்தும் குழந்தைகளின் கண்களிலும் வாயிலும் இலகுவாக சென்று பதிந்து எடுக்க முடியாமல் அவதிப்படும் குழந்தைகளும், பெற்றோர்களும் அதிகம்.
அடம் பிடித்து அழும் குழந்தைகள் அழுகையை றிறுத்தினால் போதும் என்று கருதி குழந் Buy Doxycycline தைகளுக்கு வாங்கித் தரும் திண்பண்டங்களில் சிலதை பார்ப்போம்.
Inline image 4Inline image 5
எந்த விளம்பரமும் இல்லாது என்னது என்றே தெரியாத பிளாஸ்டிக் குப்பியில் அடைக்கப்பட்டு குழந்தைகளுக்காக விற்பனையாகிக் கொண்டிருக்கும் பொடி இது. இதை தின்றதால் வாயிலும், வயற்றிலும் புண்கள் ஏற்பட்டு மூன்று வயது குழந்தை சாப்பாடு ஏதுமின்றி படுத்த படுக்கையாகி நெல்லை தனியார் மருத்துவமனையில் பல நாட்கள் தங்கி பல ஆயிரங்கள் செலவு செய்தவர்கள் உண்டு
Inline image 6
இந்த பிளாஸ்டிக் குச்சியில் அடைக்கப் பட்டுள்ள கீரீமை இரண்டு பற்களுக்கு இடையில் பலமாக கடித்து இழுத்தால்தான் வெளியே வரும்
Inline image 8
நீங்கள் பார்க்கும் இந்தப் பொடி ஓவல் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள், எலந்தப்பழம் என்று வாங்கி திண்ணப்படும் இவை கடிக்க முடியாமல் கடினமாக உள்ள தூள்கள்.
Inline image 9
இந்த ஜாமில் பேரீச்சம்பழ கொட்டைகளும் உடைக்கப்பட்டு கலந்திருக்கிறது. குழந்தைகள் சிலர் ஜாமுடன் சேர்த்து விழுங்கி விடுகிறார்கள்.
Inline image 10
Inline image 11Inline image 12
சிறு தொழில் செய்பவர்களால் செய்யப்பட்டு எந்த முகவரியும் இல்லாமல் குழந்தைகளுக்காக விற்பனைக்கு வரும் இவை மெழுகுபோல் எரியக்கூடியது
Inline image 13
இன்று குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது குர்குரே, லேஸ், ஜெல்லி, மிளகாய் பொடியையும் உப்பையும் அளவுக்கு அதிகமாய் சேர்த்து குழந்தைகளின் வாயையும் வயிற்றையும் பிஞ்சுக் குடலையும் வேக வைத்து விடுகிறார்கள்.
ஜெல்லி என்றும், க்ளுக்கோஸ் பொடி என்றும் இன்னும் என்னென்ன பெயர்களை எல்லாம் தாங்கிக் கொண்டு புதுப்புது ரகத்தில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது குழந்தைகளின் திண்பண்டங்கள்.
இவைகள் குழந்தைகளுக்கு உரியதுதானா? என்பதை வங்கிக் கொடுக்கும் பெற்றோர்களே அறியவில்லை என்றால், பின் யார்தான் அறிவது? தங்களின் குழந்தைகளின் பாதிப்பிற்கு பெற்றவர்களே காரணமாக இருக்கும்போது மற்றவர்களையும் அரசாங்கத்தையும் குறை சொல்வதில் என்ன பயன் இருக்க முடியும்?
நகரங்களில் அதன் வசதிக் கேற்ப பல வடிவங்கள் கொடுத்தும் பல வண்ணங்கள் கொடுத்தும் விற்பனை செய்யப்படுகிற திண்பண்டங்கள். அவைகள் உரிய முறையில் குழந்தைகளின் ஆரோக்கியங்கள் பேணப்படுகிறதா? என்று எத்தனை ஆட்சியாளர்கள் அதற்கான  ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள்?. அல்லது அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் எத்தனை பேர் உபயோகத்தில் இருக்கும் குழந்தைகளின் திண்பண்டங்கள் தரம் வாய்ந்தது என தெளிவு படுத்தியிருக்கிறார்கள்? அல்லது திண்பதற்கேற்ற தகுதியுடையதுதான் என எந்த அரசாங்கம் சான்றிதழ் வழங்கி இருக்கிறது?.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதி எந்த அரசும் குழந்தைகளின் திண்பண்டங்களில் இருக்கும் கெடுதல்களை தெளிவு படுத்தப்படவில்லை. அப்படியே அரசாங்கம் அதிகாரிகளை அதற்காக நியமித்திருந்தாலும், அவர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்கிறார்களா? அல்லது குழந்தைகள் திண்பதற்கான சான்றுகள் வழங்கப் பட்டுள்ளனவா? என்று எத்தனை பேர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள்?. இப்படி நகரங்களிலே இவ்வாறு இருக்கையில், கிராமப் புரங்களில் கண்டவர்கள் எல்லாம் கைத்தொழில் என்ற பெயரில் எதை எல்லாமோ? எத்தனையோ வண்ணங்களில் செய்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்
அறியாத குழைந்தைகள் மட்டுமின்றி அறிவுள்ள பெரியவர்களும் அந்த திண்பண்டத்தின் அருமை தெரியாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து அதனால் ஏற்றபட்ட விபரீதங்களை கருத்தில் கொள்ளாமல் என்னவோ.., ஏதோ என்று பதறியவர்களாய் பாதிப்புக்கு உள்ளான குழந்தையை வாரியணைத்துக் கொண்டு மருத்துவரிடம் கொண்டு போன பின்புதான் திண்பண்டத்தின் தித்திப்பான உண்மையை உணருகிறார்கள்.
சில குழந்தைகளுக்கு திண்பண்டத்தின் குணம் திண்றவுடன் தெரிந்து விடுகிறது. சில குழந்தைகளுக்கு பல நாட்கள் சென்ற பின்னால்தான்; பாதிப்பு தெரிய வருகிறது. அறிவுள்ள பெரியவர்கள் அறிந்தும் சிகெரட், மது, விபச்சாரம் அனைத்தையும் செய்கிறார்கள். ஆனால் அறியாத குழந்தைகள் அறியாமலே அமரர் ஆகிக் கொண்டிருக்கிறார்கள் இவைகளை உபயோகிப்பதால். இதையும் அரசாங்கம் அனுமதித்துக் கொண்டுதான் இருக்கிறது தெரிந்தும், தெரியாமலும்.
கொலை வெறி பிடித்த மத வெறியர்கள், குழந்தையென்றும், வயிற்றில் இருக்கும் சிசுவென்றும் பாராமல் கொன்றொழிக்கும் அரசாங்கங்களே இன்னும் ஆடாமல், அசையாமல் அப்படியே புகழோடு இருக்கையில், தரமில்லாத திண்பண்டங்களாலும், தவிற்க வேண்டிய உணவுகளாலும் தாக்குண்டு நம் வருங்கால வசந்தங்கள் இன்னும்; சப்தமின்றி ரத்தமின்றி; கருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி நாமும் நாட்டை ஆளும் அரசாங்கமும் சிந்திக்கும் நாள் எப்போது..?
செங்கோட்டையன்
கடையநல்லூர்

Add Comment