மறந்து போன பொறுப்பு

எங்க ஹஜ்ரத் என்னிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்து இதை முடித்து விடு என்று சொன்னார்கள். நான் விளையாட்டு போக்காக அதனை மறந்து விட்டேன்.

எங்க ஹஜ்ரத் அவர்கள் என்னை ஏசினார்கள், ‘ஏம்ப்பா பீ பேண்டுட்டு … கழுவ மறப்பியா..?’ என்று.

நான் மறதிக்காக வெட்கப்பட்டு தலை குனிந்தேன்.

பல சமயம் மறதி நல்லது தான். என் துக்கங்களிலிருந்து எல்லாம் என் மறதி தான் என்னை காப்பாற்றி இருக்கிறது.
ஒரு திருடனை துரத்திக் கொண்டு போலீஸ்காரர் ஓடினாராம். திருடன் வேகமாக ஓடவும் போலீஸ்காரருக்கு கடுங்கோவம் வந்து ’நீயாச்சு நானாச்சு’ என்று அசுர வேகத்தில் பாய்ந்து ஒரு வழியாக திருடனை நெருங்கி விட்டாராம். நெருங்கியவர் இப்போது ஈக்வலாக ஓட ஆரம்பித்தார், இன்னும் சிரத்தை எடுத்து மூச்சை பிடித்து அவனையே மிஞ்சி ஓடியே போய் விட்டாராம்.

இப்பொழுது நானும் இந்த போலீஸ்காரரை போல் தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு நான் செய்ய வேண்டிய பொறுப்புகளை மறந்து போட்டியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் இன்னொரு ஒட்டமும் எனக்கு நினைவிற்கு வருகிறது. இங்கே சிங்கையில் கப்பல் கட்டுமான தொழிற்சாலையில் பற்றவைப்பு வேலையில் ஈடுபடும் போது தீ/வெடிப்பு ஆபத்துகள் இருப்பதால் பக்கத்திலேயே ஒரு தீ கண்காணிப்பாளர் தீயணைப்பு சாதனத்துடன் அந்த வேலை முடிந்தும் சிறிது நேரம் அதே இடத்திலேயே இருந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் என்ற நடைமுறை சட்டம் இருக்கிறது.

அப்படி ஒரு தீ கண்காளிப்பருக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட்டு இப்படி இப்படி தீ பற்றிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது அதை இப்படி இப்படி buy Viagra online அணைக்க வேண்டும் என்ற விபரங்கள் செய்முறை விளக்கங்களோடு சொல்லி காட்டி அவரை பற்றவைப்பு வேலை நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற அவருடைய வேலை என்னவென்றால் திடீரென்று வேலையிடத்தில் தீ ஏற்பட்டால் உடனே முறைப்படி தீயை உடனே அணைத்து விட வேண்டும் என்பது தான்.

ஆனாலும் சில நிபந்தனைகள் உண்டு.. எல்லா நேரத்திலும் தீயை அணைக்கிறேன் பேர்வழி என்று அணைக்கப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது.

அந்த நிபந்தனைகளில் ஒன்று தீ அப்போது தான் பிடித்திருக்க வேண்டும் அதாவது தீயானது அதன் ஆரம்ப நிலையில் இருக்க வேண்டும் கொழுந்து விட்டு எறிந்துக் கொண்டிருக்கும் போது அணைக்க முற்படக் கூடாது.

எதிர்பார்த்த மாதிரியே (எதிர்பார்த்ததனால் தானோ என்னவோ?) தீ பிடித்து விட்டது, எல்லோரும் “ஃபயர் ஃபயர்” என்று கத்த அந்த எடத்த வுட்டு மொத மொதல்ல ஓடிப் போனது யாருன்னு நினைக்கிறீங்க..? சாட்சாத் நம்ம பையனே தான். அதான் அந்த தீ கண்காணிப்பாளர்.. இப்படி இப்படி பயிற்சி குடுத்து தொலைஞ்சாங்கள்ள.. அவரே தான்..

எனக்கு பயமாக இருக்கிறது, இந்த மாதிரி பல பொறுப்புகளை தட்டிக் கழித்து வருகிறேன் நான்.

மௌலானா ரூமி (ரஹ்) அவர்கள் லைலா மஜ்னூன் கதையை அழகாக உதாரணமாக சொல்வார்கள், மஜ்னூன் லைலாவை நினைத்துக் கொண்டே ஒட்டகத்தில் ஏறி உட்கார்ந்தானாம், லைலாவை தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் கரைந்து கொண்டிருந்த அவன் நினைத்துக் கொண்டானாம், லைலாவின் வீட்டை நோக்கித் தான் அவனது ஒட்டகம் சென்று கொண்டிருக்கிறது என்று.

மஜ்னூன் திடீரென்று உணர்வுபெற்று பார்த்த போது ஒட்டகம் லைலாவின் வீட்டை வெகு தூரம் அகன்று வந்து விட்டதாம். உடனே மஜ்னூன் ஒட்டகத்தை விட்டு இறங்கி விட்டானாம். அப்போது அவன் விளங்கிக் கொண்டானாம் தனக்கு தான் லைலாவின் மீது காதல் உள்ளது தனது ஒட்டகத்திற்கு அல்ல என்று.

நானும் ஒட்டகத்தை விட்டு இறங்க வேண்டு

Add Comment