நிதாகாத் சட்டத்தினால் வெளியேற்றப்பட்டு காலியாகிப்போன பணியிடகளில் அரபிகள்!

Buy Amoxil aligncenter” alt=”1465296_731208423558350_1737481938_n” src=”http://kadayanallur.org/wp-content/uploads/2013/12/1465296_731208423558350_1737481938_n.jpg” width=”480″ height=”250″ />

நிதாகாத் சட்டத்தினால் வெளியேற்றப்பட்டு காலியாகிப்போன பணியிடகளில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பத்துநாலாயிரம் சவூதி ஆண்களும் பெண்களும் வேலை வாய்ப்புகளைப் பெற்று அலுவலகங்களிலும் இன்ன பிற பணியிடங்களிலும் தங்களின் இருப்பை நிலை நிறுத்தியுள்ளதாக Labor Minister Adel Fakeih தொழிலாளர் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஒர்வேலையாக stc ன்னு சொல்ற சவூதி டெலிகாம் க்கு சென்று அங்கே நீண்ட காத்திருப்புக்கு பின் எனது டோக்கன் படி கஸ்டமர் கேர் எனும் வாடிக்கையாளர் சேவை முன் அமர்ந்தேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்
எஸ்….. வ அலைக்கும் சலாம்..
சொல்ல வேண்டிய விஷயத்தை ஆங்கிலத்தில் சொல்லி, எனக்கு உதவ முடியுமா எனக் கேட்க…
ரொம்ப நேரமா கேட்டுட்டு, இடையில் பிளாக்பெர்ரியில் மெச்செஜ் பண்ணி சிரிச்சுக்கிட்டே சைமல்டேனியஸா…. வல்லாஹி அயம் நாட் அண்டர்ஸ்டண்டிங்… வெயிட்,
யா காலித்!
உடனே பக்கத்து சீட்டு என்னா (எஸ்)….
அரபியில் எதோ சொல்ல பின் அவன் ஐபோன் அஞ்சில் பயன்படுத்தும் ஒரு நானோ சிம்மைக் கொடுக்க, இவன் அதை எனக்கு தந்து மகிழ, நான் என்ன என்று கேட்க, வல்லாஹி இது இல்லையா… எரிச்சலாக வந்தது…

நான் செத்து சுண்ணாம்பாகி அவன் சொல்லி நேரே மேனஜரை பத்து நிமிடம் கழித்து சந்தித்து எனது போஸ்ட் பெய்ட் சேவையை பிரிபெய்ட் சேவையாக மாற்ற வேண்டியதை சொல்ல அவர் புரிந்து அதற்கான கட்டணம் கட்ட சொல்லி நானும் கட்டி விட்டு அந்த சேவையை பெற்று வரும்போது சொன்னார். கஸ்டமர் கேர் இல் புதிய நபர்களாம் இன்னும் பழக்கம் இல்லையாம் போகப்போக சரியாகிவிடுமாம்.

Add Comment