கலைஞரே ! காவியுடன் கூட்டுக் காணவே வேண்டாம் ! – பி.எம்.கமால்,கடையநல்லூர்

546987_586507318070016_1249506115_n

காவியுடன் கூட்டுக்
காணவே வேண்டாம் !

கலைஞரே !
ஆவியுடன் கூட்டு
அமைத்தாலும் ஒருபோதும்
காவியுடன் கூட்டுக்
காணவே வேண்டாம் !

இஸ்லாமிய மந்தை
இனியும் உங்களுடன்
தொடர்ந்து வர வேண்டுமென்றும்
தோள் கொடுக்க வேண்டுமென்றும்
எண்ணினால் நீங்கள்
தாமரைப் பூவெடுத்து
தலைசூடிக் கொள்ள வேண்டாம் !

பாரதத்துப் பூ நிலத்தில்
பகை ரதத்தை ஓட்டியவர்
பச்சிளம் பிள்ளைகளைப்
பதறத் துடிக்கக் கொன்றவர்
இவர்களையா கூட்டாக்கி
இறங்குவது தேர்தலில் ?

உங்கள் குடும்பத்தை
உருக்குலையச் செய்தவர்கள்
காங்கிரஸ் என்னும்
காவிகள் !
ஆனால்
எங்கள் இனத்தையே
எடுத்தெறிய நினைக்கும்
காவிகளோடா
கை குலுக்கப் போகிறீர்கள் ?

தமிழினத்தை online pharmacy without prescription கருவறுக்கத்
தவம் செய்யும் காங்கிரசும்
சிறுபான்மை இனம் மீது
சீறிவிழும் காவியும்
இந்திய நாட்டின்
இழுக்குகள்; அழுக்குகள் !
சூரியனே ! அவர்களைச்
சுற்றிவர வேண்டாம் நீ !

-பி.எம்.கமால்,கடையநல்லூர்

Add Comment