தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: இ.யூ.முஸ்லிம் லீக்

886791_707002582645283_432617119_o

தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மொய்தீன் இன்று காலை 11 மணிக்கு கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க. கூட் டணியில் தொடர்வதாக அறிவித்தார். பின்னர் காதர்மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:–

தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ்– பா.ஜனா கட்சி களுடன் கூட்டணி இல்லை என்று எடுத்த முடிவுக்கு கருணாநிதியை சந்தித்து வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்தேன். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் நேற்றும் இருந்தோம். இன்றும் இருக்கிறோம். நாளையும் இருப்போம். அதை உறுதிப்பட சொல்வதற்காக கருணாநிதியை சந்தித் தேன். பொதுக்குழுவில் அவர் கள் எடுத்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. கூட்டணி நிலைப்பாட்டில் மாறுதல் ஏற்படுமா? என்ற ஐயப்பாட்டை கேட்கிறீர்கள். இது உங்களின் ஆசையே தவிர அவர்கள் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இனி இருக்காது.

தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பே தி.மு.க. தனது கூட்டணி கொள்கையை அறிவித்துவிட்டது. ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் பா.ஜனதா பக்கம் போவதாக பேச்சு ஏற்பட்டு உள்ளது. அதுபற்றி நாங்கள் கருத்து சொல்ல இயலாது. அது அவர்களின் முடிவு. டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஒரு முதல் வர் வேட்பாளரை அறிவித்தது. காங்கிரஸ் ஒரு முதல்வர் வேட்பாளரை அறிவித்தது. ஆனால் யாரும் சொல்லாத ஒருவரை முதல்– அமைச்சராக பொறுப்பேற்க இரு கட்சிகளும் கேட்டுக்கொண்டன.

அந்த நிலைதான் பாராளுமன்ற தேர்தலிலும் நடக்கும் என பலர் சொல்கிறார்கள்.நாம் ஒருவரை இப்போதே பிரதமர் என்று சொன்னால் அவர் பிரதமராகி விட முடியாது. அதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள். தமிழ் நாட்டில் தி.மு.க. தலைமையில் மதசார்ப்பற்ற இயக்கங்கள் ஒன்றுசேர வேண்டும். சாதி, மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத சமய சார்ப்பற்ற சமூக நீதி கூட்டணிக்குதான் மக்கள் என்றைக்கும் ஆதரவு தருவார்கள். அதற்கு தி.மு.க. எடுத்துக்காட்டாக உள்ளது.

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. நாங்கள் மாநில அளவில்தான் முடிவை எடுக்கிறோம். தேசிய அளவில் அல்ல. எனவே தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறோம்.

Buy Viagra Online No Prescription style=”text-align: justify;”>இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Add Comment