பெண்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் செல்போன்களில் அவசர கால அழைப்பு!

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து வகை செல்போன்களிலும் அவசர கால அழைப்பு பட்டனை கட்டாயம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில் நிர்பயா சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த Buy Bactrim Online No Prescription வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் மருத்துவ மாணவி இறந்து ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பெண்களுக்கான பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில், இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியை பயன்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.

இதற்காக பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ரயில்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் அவசர கால அழைப்பு ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக அந்தந்த துறை சார்ந்து தனித்தனி ஆணைகள் பிறப்பிக்கப்பட உள்ளதாக சிதம்பரம் தெரிவித்தார். இதேபோல் தகவல் தொழில்நுட்ப துறையுடன் காவல்துறையும் இணைந்து மொபைல் போன்களில் அதன் இருப்பிடங்களை விரைந்து கண்டறியும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தப்படும். அதே போல் மொபைல் போன் உற்பத்தியாளர்கள் இனி வரும் காலங்களில் அவசர கால பட்டன்களை தங்களது அனைத்து மாடல்களிலும் அமைப்பது கட்டாயமாகிறது.

பிரச்னைகளில் சிக்கும்போது மொபைலில் உள்ள குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றடையும். இந்த திட்டம் இரண்டு கட்டமாக நாடு முழுவதும் உள்ள 157 நகரங்களில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Add Comment