கலைஞர்: மானம் காப்பாரா? மானமிழந்து நிற்பாரா?

தமிழக முதல்வர் கருனாநிதி – டெல்லி சென்று சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் சந்தித்து விட்டு சென்னை திரும்பியவுடன்
முன்னால் அமைச்சர் ராஜா சி.பி.ஐ யால் – 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்ப்ட்டிருக்கிறார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் – தி.மு.க – காங்கிரஸ் கூட்டனி பற்றி கருனாநிதி அறிவிப்பு செய்துவிட்ட முக்கியமான சூழ்நிலையில் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்திருப்பது பல வினாக்களை எழுப்பியுள்ளது…

கலைஞர் குடும்பத்தின் அரசியல் (தாத்தா முதல் பேரன் வரை) களமாக மாற்றிவிட்டார் தமிழகத்தை – அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார் – மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தவிக்கும் இக்கட்டான நேரத்தில் – தோள் கொடுக்கவேண்டிய காங்கிரஸ் காலை வாரியது நியாயமா?

கடந்த காலத்தில் – கூட்டனியில் இருந்துக்கொண்டு ஆட்சியை பா.ம.க விமர்சனம் செய்ததற்காக கூட்டனி உறைவை முறித்து மருத்துவர் அய்யாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்த கலைஞர்…

முஸ்லிம்களுக்கு பிரதிதிநிதித்துவம் அளிப்பதாக இ.யூ.மு.லீ க்கிற்கு சீட்டு கொடுத்தாலும் – உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ‘கிடுக்கிப்பிடி’ போட்டு தனது அரசியல் முதிர்ச்சியை காட்டிய கருனாநிதி..

Viagra No Prescription style=”text-align: justify;”>தமிழக சட்டமன்ற சீட்டுகளின் – எண்ணிக்கையை அதிகமாக பெறவெண்டும் என்பதற்காக காங்கிரஸ் இதுபோன்ற அழுத்தங்களை கொடுக்கிறது என்று அரசியல் கணிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதிக சீட்டுகள் கேட்கும் காங்கிரஸுக்கு – முன்பு முஸ்லிம்களிடம் சொன்னது போல் – ‘இதயத்தில் இடம் தருவேன்’ என்று சொல்வாரா…

எட்டப்பன் வேலை செய்யும் காங்கிரஸுடன் கூட்டனியை துறந்து மானம் காப்பாரா? அல்லது கூட்டனியை தொடர்ந்து மானமிழந்து நிற்பாரா?

பொறுத்த்திருந்து பார்ப்போம்..

Add Comment