கடையநல்லூர் ஐ.ஓ.பி.அலுவலர்கள் வாடிக்கையாளர்களை சந்திப்பு

கடையநல்லூர் ஐ.ஓ.பி.அலுவலர்கள் வாடிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்தியன் ஓவர்சிஸ் பாங்கின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் அறிவிப்பின்படி ஐ.ஓ.பி.அலுவலர்கள் “வீடு தோறும் வீதி தோறும்’ வாடிக்கையாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் நடந்தது. கடையநல்லூர் பாங்கின் அதிகாரிகளும், அலுவலர்களும் வீடு வீடாய் சென்று வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தும், பாங்கின் சேமிப்பு மற்றும் கடன் திட்டங்களை Doxycycline No Prescription பற்றியும் எடுத்து கூறினர். மேலும் பாங்கின் சேவைகளை பொதுமக்களிடம் கூறினர். அன்று மட்டும் பணம் கட்டாமல் கணக்கு துவங்கும் நோ பிரில்ஸ் திட்டத்தின்படி 500 கணக்குகள் துவங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாங்கின் முதுநிலை மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர் சங்கரநாராயணன், அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், கணேஷ்ராம், பரமசிவன், சண்முகவேல், மகேஷ்ராஜா, சவுகத்அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Add Comment